Asianet News TamilAsianet News Tamil

உப்பில் சிறந்தது எது?- கல் உப்பா?? இந்துப்பா..??

மனித உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வெள்ளை நிறத்தில் நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் பொருட்களே முக்கிய காரணிகளாக உள்ளன. சக்கரை, உப்பு மற்றும் பால் உள்ளிட்ட இந்த மூன்று வெள்ளை பொருட்கள் உடலுக்குள் சென்றுவிட்டு செய்யும் சோதனை கொஞ்சம் நஞ்சமில்லை. இந்நிலையில் சோடியம் குளோரைடு கொண்ட கல் உப்பு/தூள் உப்புக்கு மாற்றாக இந்துப்பு என்கிற பொருள் முன்வைக்கப்படுகிறது. தற்போது நமது நாட்டில் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் சோடியம் குளோரைடு கொண்ட கல் உப்பு / தூள் உப்புக்கு மாற்றாக இந்துப்பை பயன்படுத்தலாமா என்கிற கேள்விகளும் சந்தேகங்களும் பலருக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன. அவர்கள் தெளிவுப்பெறுவதற்காகவே இப்பதிவு. தொடர்ந்து படியுங்கள்.
 

which is better and helathy salt rock salt or sea salt
Author
First Published Sep 15, 2022, 7:22 PM IST

பளீர் என்பதால் உப்பாகிவிடாது

உப்பு வெள்ளையாக இருந்தால் அது சுத்தமான உப்பு என்கிற எண்ணத்தை பல்வேறு நிறுவனங்கள், விளம்பரங்கள் மூலமாக நமக்குள் விதைத்து பல ஆண்டுகாலமாகிவிட்டது. கல் உப்பைக் காட்டிலும் தூள் உப்பு பளீர் என்கிற வெள்ளை நிறத்தில் இருக்கும். ”கல் உப்பில் இருந்து தான் தூள் உப்பு பெறப்படுகிறது. அப்படியிருக்கு, கல் உப்பு கொஞ்சம் மங்கலாகவும் தூள் உப்பு பளீச் சென்று வெள்ளையாகவும் எப்படி இருக்க முடியும்”? என்று என்றைக்காவது சிந்தித்துள்ளீர்களா? . தூள் உப்பு பளீச்சென்று வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் அயோடின் பற்றாக்குறையால் வரும் ஹைப்போதைராய்டு பிரச்சினையைப் போக்குகிறோம் என்று சொல்லி தூள் உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதை உறக்கச் சொல்லி விற்கின்றனர். இதனால் மக்களும் எந்தவித யோசனையும் இல்லாமல் வாங்கி விடுகின்றனர்.

’சப்பு’ என்று இருக்கும் உப்பு

கடல் நீரில் இருந்து இயற்கையான முறையில் உப்பு தயாரித்த காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்புகளில் இடம்பெற்றுள்ள தாத்துக்களை நீக்கிவிட்டு, வெள்ளை நிறமாக மாற்றி செயற்கையாக சில தாதுக்களை கலர்ந்து விற்பனை செய்கின்றனர். இப்போது விற்பனைக்கு கிடைக்கும் சோடியம் குளோரைடு உப்புகள் கடல் உப்பே கிடையாது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இதுபோன்ற உப்புகளால் வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிட்டன. அயோடின் சேர்த்த உப்பை சாப்பிடுவதால் தைராய்டு பிரச்னை கொண்டவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால் இதுபோன்ற உப்பிலுள்ள தன்மையால், ரசாயன சேர்க்கையால் அவர்களுக்கு வேறுவிதமான உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம் என்பது பொதுக் கருத்தாக உள்ளது.

இந்துப்பு- சிறு குறிப்பு

இந்துப்பு ஒன்றும் இந்தியாவில் புதியதாக புழக்கத்துக்கு வரவில்லை. இதுவும் பல்வேறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாறைகளில் இருந்து இந்த உப்பு எடுக்கப்படுவதால், அதற்கு இந்துப்பு என்று பெயர். ஆங்கிலத்தில் இதை ராக் சால்டு என்றும் ஹிமாலயன் சால்டு என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் தொன்மங்களில் ஒன்றான சித்த மருத்துவத்தில் சைந்தவம், சிந்துப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதிக்கூர்மை, சிந்தூரம், மதியுப்பு என்கிற பெயரில் இந்துப்பு குறிப்பிடப்பட்ட்ள்ளது. இந்தியாவில் பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிக அளவில் கிடைக்கிறது. பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்புவை சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊற வைத்து பதப்படுத்தி நமக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்துப்புவின் நன்மைகள்

பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பு ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு உள்ளிட்ட நிறங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பல்வேறு மருத்துவக் குணங்கள் இந்துப்புக்கு உண்டு. வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்களின் தன்மைகளை நீக்கி உடலை வலுப்படுத்தும், மலச்சிக்கல் பிரச்னையை உடனடியாக நீக்கும். பொட்டாசியம் குளோரைடு மற்றும் அயோடின் சத்து இயற்கையாகவே இந்துப்பில் உள்ளதால், உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காது. மேலும் இருதய நோய் பாதிப்பு வராமல் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக்குவது, சக்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சுவையின்மை பிரச்னையை களவைவது, எலும்புக்கு வலு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாக இந்துப்பு உள்ளது. 

நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

எல்லா வயதினரும் சாப்பிடக்கூடியதாக இந்துப்பு உள்ளது. உடல் பருமன் பிரச்னையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் இந்துப்பு உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம். வடமாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், இளம் வயதிலேயே முதிர்ச்சி தன்மை ஏற்படுவதை இந்த உப்பு தடுப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் செரிமானம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை குறைக்க இந்துப்பு பெரிதும் பயன்படுகிறது. தசைப்பிடிப்பு பிரச்னையை குறைக்கும் ஆற்றல் கொண்ட இந்துப்பு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது மற்றும் சைனஸ் பிரச்சினை வராமலும் தடுக்கிறது. 

இந்துப்பு சாப்பிடுபவரா நீங்கள்? அப்போது இதப்படிங்க முதல்ல..!!

நம்முடைய உடலுக்கு சோடியம் அவசியமான நுண்ணூட்டச்சத்தாகும். சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்து, பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். அப்போது கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப் பயன்படுத்தலாம். பொட்டாசியத்தின் அளவு தேவைக்கேற்ப அதிகரித்த பிறகு, கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். ஒருவேளை இந்துப்புவை பயன்படுத்து தொடர்பாக மேலதிகச் சந்தேகங்களுக்கு மருத்துவரை நீங்கள் அணுகலாம். எந்த உப்பாக இருந்தாலும், அளவோடு சேர்த்து பயன்படுத்தும் போது தான் அதனுடைய நன்மை முழுமையாக கிடைக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios