எந்த ராசியினருக்கு வி.ஐ.பி- க்களின் நட்பு தானா தேடிவரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்க வாய்ப்பு ஏற்படும். ஆன்மீக தலங்களுக்கு செல்ல விரும்புகிறீர்கள். ஆனால் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்படலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே..!

வீட்டை அழகுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து நாளுக்குநாள் உயரும் வெளியூர் பயணம் திட்டமிட்டாலும் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே...!

ஆன்மீக பயணம் மேற்கொள்ள சிந்திப்பீர்கள். தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும்.

சிம்ம ராசி நேயர்களே...!

நல்ல விசாலமாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டிற்கு குடி புகுவீர்கள். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுக்கு துரோகம் செய்பவர்களை விட்டு மெல்ல விலகி விடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு பயணம் விரைவில் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே...!

மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வென்று விடுவீர்கள். விஐபிக்களின் நட்பு உங்களுக்கு எப்போதும் உண்டு. வாகன செலவு அதிகரிக்கலாம். சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

விருச்சக ராசி நேயர்களே...!

நேர்மறை எண்ணம் வரும். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல உறக்கம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுடைய சகோதரர் வீடு தேடி வந்து உதவி செய்வார். உங்களுக்கு நன்மை உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

புதிய முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். எதிர்பாராத பண வரவு இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உடல்நலக்குறைவு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மீனராசி நேயர்களே...! 

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து பேசுவீர்கள்.