நாளுக்குரிய வண்ணத்தில் ஆடைகள்

நாம்  அணியும் ஆடை கூட நமக்கு  பன்மடங்கு  நம்பிக்கை  தரும் என்பதை  யாரும் மறுக்க முடியாது...

நாம் தேர்வு செய்யும் ஆடை,நம்முடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும்,நல்ல  தரமானதாக இருக்க வேண்டும் என்றும் நினைப்போம் அல்லவா..

அதே போன்று, ஒவ்வொருவரின் நிறம்,உருவ அமைப்பு,வயது இவற்றை எல்லாம்  அடிப்படையாக கொண்டு அவரவர்களுக்கு தேவையான ஆடையை தேர்வு  செய்கிறோம் அல்லவா...

அவ்வாறு தேர்வு செய்யும் ஆடைகள்,நமக்கு எந்த வகையில் பொருத்தமாக இருக்கும்,ராசிப்படி  எந்த  நிற ஆடை  நமக்கு எப்போதுமே  ஒரு வெற்றியை கொடுக்கும் எனவெல்லாம் ஒரு சென்டிமென்ட் ஐதீகம்  உள்ளது..

அதன்படி,

எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த  நிறத்தில் ஆடை அணிந்தால் சென்டிமெண்டாக வெற்றி அடைய  வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளுக்குரிய வண்ணத்தில் ஆடைகளை அணிந்து வந்தால் எடுத்த காரியங்களைத் தடைகள் நீங்கி சுபமாய் முடியும்.ஆரோக்கியம் வளரும்.

கிழமை மற்றும் ஆடை நிறம் 

ஞாயிறு – ஆரஞ்சி

திங்கள் – வெள்ளையில் சிவப்பு


செவ்வாய் – சிவப்பு

புதன் – பச்சை


வியாழன் – மஞ்சள், பொன்னிறம்

வெள்ளி – வெள்ளையில் நீலம்

சனி – கருநீலம்/கருப்பு

இவ்வாறு  அந்தந்த  நாளில்  அதற்கேற்றவாறு  குறிப்பிட்ட நேரத்தில்  ஆடையை  அணிந்து  சென்றால்  நன்மை பயக்கும் என்பது ஐதீகம்