ரஜினியின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்...! தீபாவளியன்று முக்கிய முடிவு அறிவிப்பு..!? 

அரசியல் குறித்து முக்கிய முடிவை எடுப்பதற்காகவே ரஜினிகாந்த் தற்போது இமயமலை சென்று உள்ளார் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் உலக அளவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதேவேளையில் நடிப்பையும் தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் கால் பதிய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் உடனான சந்திப்பில் அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவை அறிவித்தார்.

மேலும் எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதாக இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பின்னர் சென்னை திரும்பிய உடன் அறிவிப்பார் அல்லது மனதளவில் முக்கிய முடிவை எடுத்திருப்பார் என்றுதான் பொருள்படும். சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி மருத்துவர்களின் ஆலோசனைப்படி இமையமலை பயணங்களை தவிர்த்து வந்தார். இதற்கிடையில் பேட்ட படத்தின் போது டார்ஜிலிங்கில் ஷூட்டிங் நடந்ததால் ரிஷிகேஷ் சென்று வந்திருந்தார். ஆனால் பாபா குகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு அவர் செல்லவில்லை. இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படமான சிவா படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இதற்கு முன்னதாக தற்போது இமயமலை சென்று உள்ளார் ரஜினிகாந்த். மேலும் தனக்கு ஆன்மீக அரசியலில் நாட்டம் உள்ளது என தெரிவித்து இருந்த ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் சரியாக இருக்கிறார். ஆனால் அரசியலில் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளார் என்ற கேள்வி இன்றளவும் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. அதே வேளையில் தற்போது இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று காலை விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் சென்ற ரஜினி அங்கிருந்து கார் மூலம் இமயமலை பகுதிக்கு செல்கிறார். பத்து நாட்கள் திட்டமிட்டு பாபா புகை, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்ல உள்ளார் ரஜினிகாந்த். தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக சென்னை திரும்பும் ரஜினி அரசியல் குறித்து சில முக்கிய  அறிவிப்பை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அது அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமையும் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.

எனவே இந்த ஆன்மீக பயணம் அரசியல் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தான் இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ரஜினியை பொறுத்தவரை இதற்கு முன்னதாக இமயமலை பயணம் மேற்கொள்ளும்போது பாபாஜி பத்ரிநாத் கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து செல்வது வழக்கம். ஆனால் உடல் நலம் கருதி இந்த முறை ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளார் ரஜினி என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.