ஒரு பெண்ணுடன் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில் அவளை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று தோன்றலாம். இருக்கவே இருக்கின்றன சமூக ஊடகங்கள். அவற்றின் மூலம் கடினமாக இல்லாமல் இயல்பாக காதலை வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.

வீடியோ அனுப்புங்கள்

நீங்கள் அவருடன் இருக்கும் நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் விதத்தில் ஒரு அழகான வீடியோவை உருவாக்குங்கள். நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள், அவருடன் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அவருக்கு உணர்த்தும் விதத்தில் வீடியோவை உருவாக்குங்கள்.

சொந்தமாக பாடலை உருவாக்குங்கள்.

நீங்கள் இசைக்கலைஞர் என்றால் காதலிக்காக ஒரு பாடலை பதிவு செய்து அனுப்பலாம் ஒரு வேளை இந்த பாடல் வைரல் ஆனால், உங்கள் காதலின் ஆழத்தை மற்றவர்களும் புரிந்து கொள்ள முடியும்.

எது சரியான நேரம்?

எந்த நேரத்தில் காதலை அறிவிக்க வேண்டும் என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். காதலியின் சௌகரியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் எப்போதும் இருப்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் அவரை நேரில் காண முடியாத தருணங்களில் சமூக ஊடகம் மூலம் அவரைப் பின்தொடர்வதால் உங்கள் அருகாமை அவருக்கு இருப்பதாக தோன்றச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் நெருக்கம் மேலும் அதிகரிக்கலாம்.

ஓவியத்தை உருவாக்கலாம்

ஆன்லைன் மூலம் சில அழகான ஓவியத்தை உருவாக்கலாம். ஒரு அழகான ஓவியம் மூலம் உங்கள் காதலை வெளிபடுத்துவது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத உணர்வைத் தரும். 

காதல் உறுதியானவுடன் இதே ஓவியத்தை அவருக்கு நிஜமாகவே பரிசளிக்கலாம்.  ஓவியத்திற்கு ஏற்ற அழகான வாசகங்களை எழுதி இணைக்கலாம்.

ப்ரைவேட் சாட்

ப்ரைவேட் சாட்டிங்கிற்கு அவரை அழைக்கலாம். இதன்மூலம் நீங்கள் அனுப்பும் செய்தியை அவர் மட்டும் படிக்க முடியும். இருவரும் தனிப்பட்ட கருத்துகளை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். காதலை எளிதில் புரிய வைக்கவும் முடியும்.

வெளியிடம்

சமூக ஊடக நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுங்கள். பேஸ்புக்கில் நீங்கள் பரிந்துரைத்த குறிப்பிட்ட இடத்திற்கு அவரை வரவழையுங்கள் . அவர் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் எதாவது செய்ய விரும்புகிறீர்கள் என்பது அவருக்கு புரியவேண்டும்.