Asianet News TamilAsianet News Tamil

அதிக வீரியத்துடன் தாக்கும் டெங்கு..? விடாது மீண்டும் வரும் டெங்கு..!

டெங்கு பாதித்த ஒருவருக்கு மீண்டும் மீண்டும் டெங்கு பாதிக்குமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கு அல்லவா..?
 

whether dengue will affect frequently ?
Author
Chennai, First Published Jul 25, 2019, 6:18 PM IST

அதிக வீரியத்துடன் தாக்கும் டெங்கு..?  விடாது மீண்டும் வரும் டெங்கு..! 

டெங்கு பாதித்த ஒருவருக்கு மீண்டும் மீண்டும் டெங்கு பாதிக்குமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கு அல்லவா..?

முழுக்க முழுக்க கொசு கடியால் வரக்கூடிய டெங்கு நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய விட்டு செல்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்தாலும், டெங்கு வைரஸ் 4 வகையாக உள்ளது.

whether dengue will affect frequently ?

இதில் ஏதாவது ஒன்று மீண்டும் நம்மை தாக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. இதில் நாம் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே பாதித்த அதே வைரஸால், பாதிப்பு ஏற்படாது. ஆனால் டெங்குவில் டென் 1, டென் 2, டென் 3, டென் 4 என நான்கு வகைகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்று மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது. 

whether dengue will affect frequently ?

மேலும், முதன் முறையாக டெங்கு பாதிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெங்கு பாதிப்பிலிருந்து விடுபட்ட பிறகு கண்டிப்பாக நம் உடலுக்கு  நல்ல ஓய்வு தேவை. யோகா, நடைபயிற்சி மேற்கொள்வதும் நல்லது. குறிப்பாக நம் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தினமும் பழச்சாற்றை எடுத்துக்கொள்ளலாம். ரத்த தட்டணுக்களின் உற்பத்திக்கு தேவையான சத்தான உணவு வகைகள் மற்றும் பல வகைகளை எடுத்துக்கொள்வதும் நல்லது. 

Follow Us:
Download App:
  • android
  • ios