கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்... மத்திய அரசு அறிவுறுத்தல்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், தொற்றி லிருந்து குணமடைந்து 3 மாதம் கழித்து 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.