whatsapp facebook affects sleep

சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்க செல்வதற்கு முன் கூட, மக்களின் ஆர்வம் சமூக வலைதளங்களின் மீது தான் உண்டு .

குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் தூக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .அதுவும் குறிப்பாக இந்தியர்கள் தான் அதிகம் சமூக வலைத்தளங்களுக்காக அதிக நேரம் செலவிடுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது .

அதன்படி குறைந்தது ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது . இதன் விளைவாக தூக்கம் குறைகிறது. தூக்கம் இல்லாத வாழ்க்கை, மனதிற்கும் சரி , உடலிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக எளிதில் எந்த பிரச்சனை வேண்டுமென்றாலும் நம் உடலையும் மனதையும் பாதிக்கலாம் என்கிறது மருத்துவ குழு .

மேலும் கடந்த 2௦15 ஆம் ஆண்டு நடத்தப்பட்டஆய்வில் ,மாரடைப்பு எற்பட்டவர்களில் 9௦ சதவீத மக்கள் தூக்கமின்மையால் இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது .

எனவே இன்டர்நெட் பயன்பாடு தேவை தான் அதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா..? என்பதை சிந்தித்து பார்த்து செயல்படவும்