அவசர செய்தி...!  WHATS APP GROUP பெயர் இனி காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்..! அதிரடி நடவடிக்கை...!  

சமூக  வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது வாட்ஸ் அப் அப்ளிகேஷன்.

முன்பு ஒரு காலத்தில் புறாவை கொண்டு தூது அனுப்புவது,பின்னர் கடிதம், அல்லது ஆட்களை நேரடியாக அனுப்பி  தகவல் அனுப்புவது, பின்னர்  டெலிகிராம், போன்,அடுத்து மெயில் என தகவல் பரிமாற்றம் தொடங்கி தற்போது, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் வரை வந்துவிட்டது.

வாட்ஸ் அப்பின் பயன்பாடுகளை அதிகம் விரும்பும் மக்கள், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கும் சரி, புகை படங்கள் அனுப்பி ரசிப்பதற்கும் சரி, வீடியோ கால் மூலம் பேசி மகிழ்வதற்கும் சரி  இந்த ஒரு ஆப் போதுமானதாக உள்ளது  

ஆனால் இதே வாட்ஸ் ஆப்  மூலம் பகிரப்படும் அனைத்து விஷயங்களும் சரியானது என்று கூற முடியாது அல்லவா..? உதாரணதிற்கு வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ள ஒரு கும்பல் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வாட்ஸ் ஆப் மூலம் பெரிதும் பகிரப்பட்டு வந்தது.

அதன் விளைவு பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை ஊர்மக்கள் அடித்தே கொன்றனர்.

இது போன்று சமூக நலனை கெடுக்கும் வகையில் பகிரப்பட்டு வரும் தவறான  தகவல்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனமும், தவறான தகவல்களை  அடையாளம் காணும் பொருட்டு,ரெட் டிக் வரும் காண்பிக்கும் படியான ஒரு சலுகையை அறிமுகம் செய்தது

இந்நிலையில், நம்முடைய வாட்ஸ்அப் குழுவை இனி போலீஸில் பதிவு செய்தாக வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது

இதன் முதற்கட்டமாக, அணில் குமார் ஷான் என்பவர் கிஸ்துவார் காவல் நிலையத்தில், தான் வாட்ஸ் அப் அட்மினாக உள்ளேன் என பதிவு செய்து உள்ளார்

பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி போல் நாமும் இனி கண்காணிக்கப்படுவோம்.முதல் கட்டமாக காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து குழுக்களின் அட்மின்களும் விரைவில் பதிவு செய்யும் நிலைமை உருவாகும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முறை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும் தருவாயில், போலியான தகவல்கள் தடுக்கப்படும்