2020 ஆம் ஆண்டு நடக்கப்போவது என்ன..? குருட்டு பாபா அதிர்ச்சி தகவல்..! 

வரும் 2020ஆம் ஆண்டு ஐரோப்பிய மக்களுக்கும், வெள்ளை மாளிகைக்கு கெடுதலை விளைவிக்க வாய்ப்பு உள்ளது என குருட்டு பாபாவின் அதிர்ச்சி கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனை இழக்க நேரிடும் என தெரிவித்து உள்ளார் குரு பாவா. இவர் 1996 ஆண்டு உயிர் நீத்தார். இதற்கு முன்னதாக அவர் கணித்துள்ள பல விஷயங்கள் சொன்ன நேரத்தில் அப்படியே நடந்து உள்ளது. உதாரணத்திற்கு இவருக்கு கண்கள் தெரியவில்லை என்றாலுமே கூட இரட்டை கோபுர தாக்குதல் நடக்கும் என முன்னதாகவே தெரிவித்து இருந்தார். 5079 ஆம் ஆண்டு வரை இந்த உலகில் நடக்க இருக்கும் மிக முக்கிய மாற்றங்கள் என்ற பெயரில் பல விஷயங்களை கண்டித்து உள்ளார்.

அந்தவகையில் 2020ம் ஆண்டு எடுத்துக்கொண்டால், வெள்ளை மாளிகை மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு மிகவும் கெட்ட நேரமாக அமையும் எனவும், மேலும் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டிரம்புக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதனால் மூளை செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதேப்போன்று ரஷ்ய அதிபர் புடினை கொல்வதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். அதேபோன்று ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயனம் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ரஷ்யா உலகின் மாபெரும் சக்தியாக மாறும் என்றும், தற்போது முன்னிலை வகிக்க கூடிய ஐரோப்பா பயனற்ற ஒரு நிலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் 1979-ஆம் ஆண்டு கணித்த போது இந்த தகவலையும் தெரிவித்து இருந்திருக்கிறார். இந்த நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் புதுவருடம் பிறக்க உள்ளதால், குருட்டு பாபா கணித்த விஷயங்கள் தற்போது ஒன்றன்  பின்னாக ஒன்றாக வெளிவந்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதற்கு முன்னதாக நாளை நடக்க உள்ள சூரிய கிரகணத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும்  குறிப்பாக 12 ராசியினரும் அவரவர் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்யவும் ஆயத்தமாகி வருகின்றனர்.