ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்ற கேம் சேஞ்சிங் தருணம் முக்கியமானது அது பலருக்கு நல்ல மாற்றமாகவும், சிலருக்கு சறுக்கலாகவும் இருக்கலாம். ஆண்களை விட இது பெண்களுக்கு சற்று கடினம் அணி மாறி விளையாட வேண்டும். புதிய வீரர்களுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். 

இந்த நேரத்தில் பழைய அணியின் கேப்டனான அம்மாவிடம் இருந்து மகள்கள் இழந்து வருந்தும் சில இருக்கின்றன.
  
உணவு!

மாமியார், நாத்தனார், கணவர், அல்லது தானே சமைத்தாலும் அம்மாவின் கைப்பக்குவம் மற்றும் ருசியை மிஸ் செய்கிறார்கள். உலகின் சிறந்த சமையல்காரர் சமைத்து கொடுத்தாலும் கூட அம்மாவின் கைப்பக்குவம் மிஸ் செய்கிறார்கள் பெண்கள். புதியதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போன பெண்களின் பழைய கைப்பக்குவம் கொஞ்சம் குறைந்திருக்கும். புதிய சமையலறை, எந்த பொருள், எங்கே வைத்தோம் அல்லது இருக்கிறது என்ற கவன சிதறல் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

எங்கே?

மகள்கள் அவர்களது பொருட்களை எங்கே வைத்தாலும், அதை எடுத்து சரியான இடத்தில் வைக்கும் பழக்கம் அம்மாவிற்கு உண்டு.  தினமும் காலையில் தங்களது ஹேர் கிளிப்பில் இருந்து இதர பெண்கள் சமாச்சார பொருட்கள் வரை அம்மா தான் எடுத்து தர வேண்டும். இதை தங்கள் அம்மாவிடம் இருந்து பிரிந்த புதியதாக திருமணமான பெண்கள் மிஸ் செய்கிறார்கள்.

உடல்நலம்...

உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால் தேடும் முதல் நபர் மருத்துவர் அல்ல, அம்மா தான். எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்கான சிறந்த மருத்துவராக இருப்பது அம்மாக்கள் தான்.

அம்மாவிடம் எத்தனை வேண்டுமானாலும் குழந்தைத்தனமாக அடம் பிடிக்கலாம். மாமியார், நாத்தனாரிடம் எதிர்பார்த்தால் கெட்ட பெயர்தான்.

அலாரம்!

வீட்டில் கடிகாரம், மொபைல் என எதில் அலாரம் வைத்தாலும், குழந்தைகளை எழுப்புவது அம்மாவின் குரல் என்ற அலாரம் தான். அந்த அலாரம் திட்டும், அடிக்கும், தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் ஊற்றும். இந்த அலாரத்திடம் ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று கெஞ்சிக் கேட்டு கூடுதலாக தூங்க முடியும். பெண்கள் தங்கள் அம்மாவிடம் இதை அதிகம் மிஸ் செய்கிறார்கள்

மேலாண்மை!

உலகின் எந்தவொரு சிறந்த மேலாண்மை கல்லூரியும், திருமணத்திற்கு பிறகு வீட்டை எப்படி கையாள வேண்டும், பொறுப்புகளை எப்படி எடுத்து செய்ய வேண்டும் என்பதை கற்பிப்பதில்லை இவை அவரவர் குடும்பத்தை பொருத்து, அவரவர் அனுபவத்தில் பெற வேண்டிய திறன். 

மோசமான நாள்

பெண்களின் வாழ்வின் மாதம்தோறும் வரும் அந்த 3 நாட்களில் பெரும் துணை அம்மாக்கள்தான். தாயின் மடிவில் படுத்து, அந்த இதமான அணைப்பு மற்றும் வருடுதலில் வலியை மறந்து உறங்கிவிடுவார்கள். இது கணவனிடமோ, மாமியாரிடமோ கிடைப்பது அரிது. கணவனுக்கு வலி புரியவே கொஞ்ச காலமாகும்.