நாய் கடித்த உடனே என்ன செய்தால் உயிருக்கு ஆபத்து வராது என்று இங்கு காணலாம்.
நாய்கள் வளர்ப்பதற்கு அனைவருக்கும் பிடிக்கும். பெரும்பாலான வீடுகளில் நாய்கள் செல்லப் பிராணியாக இருக்கும். ஆனால், அவற்றால் ஆபத்தும் இருக்கிறது. அதாவது நாய் கடித்தால் அதை ஒருபோதும் அலட்சியமாக விடக்கூடாது. சில நாய்கள் கடித்தால் உடல் நலத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ரேபிஸ் போன்ற மோசமான தாக்கத்திற்கு வழிவகுக்கும்.
எனவே, நம் வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் சரி, தெருவில் இருக்கும் நாயாக இருந்தாலும் சரி அவற்றிடம் கடி வாங்கினால் கண்டிப்பாக உரிய சிக்ச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உயிருக்கு தான் ஆபத்து. சரி இப்போது இந்த பதிவில் நாய் கடித்த உடனே செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியவை :
நாய் கடித்தால் உடனே பதற்றப்பட வேண்டாம். முதலில் ஓடும் தண்ணீரில் காயம் ஏற்பட்ட பகுதியை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் சோப்பு போட்டு கழுவ வேண்டும் இப்படி செய்வதன் மூலம் வைரஸ் தொற்று உடலில் நுழைவது தடுக்கப்படும். அதன் பிறகு உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள். காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் ஊசி போடுவார். நாய் கடித்தால் ரேபிஸூடன் டெட்டன்ஸ் வரும் அபாயம் உள்ளதால் அதற்கும் நிச்சயமாக ஒரு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். குறைந்தது நான்கு முதல் ஐந்து டோஸ்கள் போடவும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் ரேபிஸ் அபாயத்திலிருந்து விடுபடுவீர்கள். மேலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
நாய் கடித்த பிறகு சாப்பிட கூடாத உணவுகள் :
1. இனிப்புகள்
இனிப்பு சாப்பிட்டால் வீக்கத்திற்கு வழிவகுக்கும், மெதுவாக காயம் குணமடையும் மற்றும் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
2. கடினமான உணவுகள்
உங்களது வாய்க்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் நாய் கடித்தால் மென்று சாப்பிடுவதற்கு ரொம்பவே சிரமமாக இருக்கும். எனவே கடினமான உணவுகள் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இரு காயத்தை மேலும் மோசமாகும்.
3. பால் பொருட்கள்
பால், தயிர், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் சளியை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், பாக்டீரியா உற்பத்தியை அதிகரித்து, நோய் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
4. மதுபானம்
நாயிடம் கடி வாங்கிய பிறகு மதுபானம் அருந்தக்கூடாது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, நோய் தொற்று அபாயத்திற்கு வழிவசிக்கும்.
5. காரமான உணவுகள்
புளிப்பு காரம் போன்ற உணவுகள் காயத்தில் எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும்.
