அவசர மருத்துவ சிகிச்சை தேவையா..? 

அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போது நம்மில் பல பேருக்கு எப்படி நிலைமையை சமாளிப்பது என தெரிவதில்லை. ஒரு முதலுதவி பெறுவதற்கு கூட யாரை அழைக்க வேண்டும்..? அடுத்து என்ன செய்வது என கூட தெரியாது. மொத்தத்தில் விழிபிதுங்கி யோசனை செய்யும் நேரமாக மாறிவிடுகிறது அந்த தருணம்.காரணம்.. கையில் பணம் உண்டா..? பெரிய மருத்துவமனைக்கு சென்றால் பணம் செலவாகுமே? யார் கொடுப்பாங்க..? இது போன்ற பல கேள்விகள் எழும்.

உதாரணத்திற்கு நாமே வெளியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக  ஏதோ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால், சாலையை கடந்து செல்பவர்கள் தான் உதவி செய்வார்கள் அல்லவா..? அவ்வாறு நமக்கு முதலுதவியோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சையோ பெற கூடிய சூழல் வந்தால் அவர்களும் என்ன செய்வார்கள்..? எந்த பதற்றமும்  இன்றி நம்மை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அளவிற்கு வழிவகை செய்து தர வேண்டும் அல்லவா..? 

அப்படி என்றால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ?

அவசர காலத்திற்கு யாரை அழைக்க வேண்டுமோ அவர்களின் மொபைல் எண்ணை நம் ஸ்பீட் டயல் லிஸ்டிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி பாக்கெட்டில் வைத்துக்கொள்வதோ மிகவும் சிறந்தது.

எல்லோரிடமும் கையில் போன் உள்ளது அல்லவா? எனவே, அவசர காலங்களில் உதவி பெறுவதற்காகவே சில செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக மருத்துவ சேவை, காவல் நிலையத்தை அணுக வேண்டிய சூழல் என அனைத்தையும், இருந்த இடத்தில் இருந்து செயலி மூலம் பயன்பெறலாம்.

இதற்கு அடுத்த படியாக, மிக முக்கியமானது என்னவென்றால், "கேஷ் லெஸ் மெடிக்கல் இன்சூரன்ஸ்". அது என்ன கேஷ்லெஸ்? ஆம்... ஒரு பைசா கூட கையில் இல்லை என்றாலும் பரவாயில்லை. கேஷ் லெஸ் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தாலே போதும். சிகிச்சைக்கான கட்டணத்தை கட்ட தேவை இல்லை. மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படும் போது முன் பணம் கூட செலுத்த தேவை இல்லை.

ஏடிஎம் மெஷினில், பணம் எடுக்க டெபிட் கார்டு பயன்படுத்துவது போல, மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த திட்டத்தை பெற என்ன செய்யவேண்டும் தெரியுமா?

 Max Bupa health insurance எடுத்தாலே போதும். அவசர தேவைக்கு வெறும் 30 நிமிடத்தில் மருத்துவ சிகிச்சையே தொடங்கி விடலாம்.

மிக பெரிய மருத்துவமனை குழுமத்தோடு செயல்பட்டு வரும் Max Bupa 4500 மருத்துவமனைகளுக்கு மேற்பட்ட பல்வேறு மருத்துவமனைகளுடன் தன்னை இணைந்து கொண்டு மிக சிறந்த சேவையை செய்து வருகிறது. 24 மணி நேர சேவையும் வழங்குகிறது.

எந்த இடமாக இருந்தாலும் சரி, எந்த நேரமாக இருந்தாலும் சரி 24 மணி நேர சேவையும் மக்களுக்காக வழங்குகிறது. ஒரு முறை இந்த இந்த இன்சூரன்ஸ் எடுத்துவிட்டால் போதும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை செலவாகும் தொகையை ஒரு கவரேஜாக நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்திவிடும்.

இதே போன்று சில சமயத்தில், கையில் உள்ள தொகையை வைத்து சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதற்கான கட்டண ரசீதை செலுத்தி, கிளெய்ம் செய்துக்கொள்ளலாம். Max Bupa சேவையை பாராட்டி 2018 ஆம் ஆண்டுக்கான GoActive Product of the Year அவார்டும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு சிறப்பு சலுகை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இன்சூரன்ஸை நீங்க உடனே எடுத்துக்கொள்ளலாமே..!