Asianet News TamilAsianet News Tamil

ஆன்ம உணர்வே தியானம் ..! எப்படி தெரியுமா?

what is the meditation
what is  the  meditation
Author
First Published Nov 10, 2017, 5:11 PM IST


பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின் படி தியானம் ஏழாவது உறுப்பு ஆகிறது. அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும்.. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானம் என்பது... 

தியானம் என்பது செய்வதோ பார்ப்பதோ அல்ல.
 
மாறாக ,நம் தெய்விக இயல்பில் திளைத்திருப்பது 

தவம் என்றால் சிவம் என்றும் பொருள். எல்லையற்ற, சலனமற்ற, தெய்விக ஆனந்த நிலையே சிவ நிலை.

அது எப்போது சித்திக்கும்...???

மனம் அலையாமல் நிலையாக அடக்க நிலையில் இருக்கும் போது மட்டுமே சித்திக்கும் 

மனம் எப்போது அடங்கும்....?

பயம் அல்லது, அறிவில் தெளிவு இல்லாதபோது மனம் அலையும்.

அறிவில் தெளிவு வந்துவிட்டால், அலையும் மனம் தெய்விகத்தில் ஒருமுகப்படும் .

அப்போது தெய்விகத்தில் நிலைபெறுவது இயல்பாகிவிடும்.

இதுவே ஆன்ம உணர்வு

இந்த உணர்வே தியானம்

Follow Us:
Download App:
  • android
  • ios