வெறும் நாலரை மணி நேரத்திற்குள் பக்கவாதத்தை சுலபமாக வெல்லலாம் தெரியுமா?

Stroke Symptoms : ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக நாம் என்ன செய்யவேண்டும், அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

what is stroke know causes and  symptoms of stroke in tamil mks

பொதுவாகவே, பக்கவாதம் வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு கூட பத்தவாதம் வருகின்றது.

பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணம்: 

மூளையின் இரத்த நாள அடைப்பினால் பக்கவாதம் ஏற்படுகின்றது. அதாவது,  80% பக்கவாதங்கள் இரத்த நாள கட்டிகள் மூலமும், மீதி 20% இரத்த நாளக் கசிவினால் ஏற்படுகிறது.

இதையும் படிங்க:  சில நிமிடங்கள் கோபப்பட்டால் கூட.. இதய பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.. ஆய்வில் பகீர் தகவல்..

பக்கவாதத்திற்கான காரணிகள்:

  • வயது முதிர்வு
  • இரத்த அழுத்தம் (அ) இரத்த கொதிப்பு நீரிழிவு நோய்
  • புகைபிடிக்கும் பழக்கம்
  • மது அருந்தும் பழக்கம்
  • ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பது
  • இதய கோளாறு
  • இரத்த உறைவு பிரச்சனை

இந்நிலையில், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது பக்கத்து வீடுக்காரர்களுக்கோ கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால், அசால்டாக இருக்காமல் கவனமாக இருங்கள். ஏனெனில், அவை பக்கவாதத்திற்கான அறிகுறிகள்.

இதையும் படிங்க: பாடல்களைப் பாடி Brain Strokeகிற்கு சிகிச்சை.. எய்ம்ஸின் இந்த புதிய சிகிச்சை எப்படி வேலை செய்யும்? ஒரு பார்வை!

பக்கவாதத்திற்கான சில அறிகுறிகள் :

1. சரியாக நடக்க அல்லது உட்கார  முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுவது.

2. திடீரென கண் பார்வை மங்கி போவது, கண் பார்வை தெரியாமல் போவது அல்லது கண் பார்வை இரண்டாகத் தெரிவது.

3. முகம் ஒரு பக்கமாக தொங்கிப்போவது மற்றும் ஒரு பக்கமாக வாய் இழுத்துக் கொள்ளுவது.

4. கைகள் மற்றும் கால்கள் எந்தவித 
அசைவுமின்றி தொங்கிப்போவது அல்லது வலு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது போல் இருப்பது.

5. சரியாக பேச முடியாமல் போவது. அதாவது, பேச்சும் போது குளறுதல். சுத்தமாக  பேச்ச முடியாமல் போவது மற்றும் பேச்சில் தடுமாற்றம் வருவது.

மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் ஒருவருக்கு இருந்தால் உடனே சிடி ஸ்கேன் மூலம் உறுதி செய்யப்பட்டால், உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால், அதாவது நாலரை மணிநேரங்களுக்குள், ஆங்கில மருந்து  செலுத்தினால் பக்கவாத அறிகுறிகள் முழுமையாக நீங்கிவிடலாம். மேலும்  பழைய நிலைக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இவற்றின் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

யாருக்கேனும் பக்கவாத அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாக 108-க்கு அழைத்து, அந்த நபரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கண்டிப்பாக அழைத்து செல்லுங்கள். ஏனெனில், நான்கரை மணிநேரத்திற்குள் பக்கவாதத்திற்கு சிகிச்சை செய்தால் மட்டுமே அந்த நபர் முழுமையாக குணமடைய முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios