Asianet News TamilAsianet News Tamil

அன்னதானம் ஏன் வழங்க வேண்டும் தெரியுமா..?

அன்னதானம் என்பது இருக்க பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பது அல்ல பொருள். அதையும் தான் அதில் பல விஷயம் உள்ளது. 

what is nthe meaning of annathanam
Author
Chennai, First Published Oct 13, 2018, 7:11 PM IST

அன்னதானம் என்பது இருக்க பட்டவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பது அல்ல பொருள். அதையும் தாண்டி அதில் பல விஷயம் உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மனம் முழுவதும் இறை பண்பு நோக்கியே இருக்கும். எப்போதும் இறைவன் குறித்த சிந்தனை அதிக வலுப்பெறும். 

அவருக்கு தேவையான உணவு கிடைக்காத சமயத்தில், வயிற்று பிழைப்பிற்கு வேறு வேலை செய்ய வேண்டிய சூழல் நிலவினால், ஆன்மீகத்தில் ஞான நிலையை, இறையை காண விரும்பும் மனம் மாறும். ஆன்மீகத்தை காக்க, தர்ம சிந்தனை வளர்க்க ஆன்மீக வாதிகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
 
இறைவன் என்றால் இறை+இரை- அதாவது, உணவு + இரக்கம் கொண்டாரை இறைவன் என்பர்.அனைத்து உயிர்கள் மீதும் இரக்கத்துடன் இறையை (உணவை) கொடுத்து வாழ்பவன் மனித தன்மையினால் சுமந்து கொண்டுள்ள தம் கர்மாவை நீக்கி இறைவனுக்கு ஒப்பானவன் ஆகிறான். இது தான் அன்னதானம் செய்வதற்கு உண்மையான காரணமாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios