Asianet News TamilAsianet News Tamil

சுயநலம் எவ்வளவு மோசமானது தெரியுமா? நீங்கள் அவர்களின் வலையில் சிக்கினால் அவ்வளவுதான்!!

சுயநலம் என்பது நாம் பார்க்கும் குணங்களில் மிகவும் மோசமான ஒன்றாகும். இருப்பினும், இந்த குணத்தால், மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் போக்கு அதிகரிக்கிறது. இதனால் இவர்களது துணையின் அமைதியும் கெடுகிறது.

What is Narcissistic Personality Disorder and how they are controlling partner DLG
Author
First Published Sep 4, 2023, 3:34 PM IST

மனிதர்களின் ஆளுமை வகைகள் வெவ்வேறானவை. சிலர் தன்னலமற்றவர்களாக இருந்தாலும், சிலர் சுயநலம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதாவது, மற்றவர்களை எரிச்சல்படுத்துவதில் திறமையானவர்கள். இந்த குணத்தை தங்களது  அன்புக்குரிய துணையிடமும் காட்டுவார்கள். தெரிந்தோ தெரியாமலோ இப்படிப்பட்டவர்களின் வலையில் விழுந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எமோஷனல் பிளாக் மெயில் செய்வார்கள். அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவில் இருந்தும் வெளியேற முடியாது. அமைதியின்மை ஏற்படும். சுயநலம் கொண்ட நபரின் உணர்வுகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி சிந்தித்தால் நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எச்சரிக்கை அவசியம்.

கவனம் தேவை:
சுயநலம் கொண்டவர்கள் அதிக பட்ஜெட் கொண்ட இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் உங்களை உணர்வு ரீதியாக கவர முயற்சிக்கலாம். எந்தக் காரணமும் இல்லாமல் அதிக முன்னுரிமை கொடுப்பது உங்களை கட்டிப்போட வைக்கும். இத்தகைய நடத்தை உறவுக்கு ஆரோக்கியமற்றது.

நெருக்கம்:
பொதுவாக சுயநலம் உள்ளவர்கள் தங்களது காதலை மிக விரைவாக வெளிப்படுத்துவார்கள். உங்கள் மீது அதீத பாசம் காட்டுவார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள உங்களை கட்டாயப்படுத்தலாம். நெருக்கத்தைக் காட்டலாம்.

நீங்க கல்யாணம் பண்ண போறீங்களா? அப்ப திருமணத்திற்கு முன் மறந்தும் கூட 'இந்த' தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க...!!

கட்டுப்படுத்துதல்:
பொதுவாக சுயநலவாதிகள் உங்களை எப்படியாவது கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். இது தொடக்கத்தில் பொருத்தமாகத் தோன்றினாலும், படிப்படியாக இது உங்களை முழுக்க அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சியாக இருக்கும். உங்களுடன் ஆழமான உறவைப் பெற இதைச் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால், அவர்கள் உங்களை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்றே முயற்சிப்பார்கள்.

தனிமைப்படுத்தல்:
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் உங்களை உணர்ச்சி ரீதியாக தனிமைப்படுத்த முயற்சி செய்யலாம். 

போலித்தனம்:
ஒரு உறவில் அழகான எதிர்காலத்தை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். சுயநலம் உள்ளவர்கள் விதிவிலக்கல்ல. எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளான திருமணம், வீடு போன்ற கனவுகளை விதைப்பார்கள். உங்களை ஒதுக்கி வைப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும். எந்த அடித்தளமும் இல்லாமல் அற்புதமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு வெற்று உலகத்தையே நீங்கள் காணலாம். 

நீங்கள் எண் 1ல் பிறந்த நபரா? உங்கள் பிறந்த தேதி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

சுயநலம் மரபணுவா?
சுயநலம் மரபணுவா என்றால்? இல்லை. யாரும் அவ்வாறு பிறப்பதில்லை. சுற்றுச்சூழல் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. நீங்கள் வித்தியாசமானவர்கள் என்றும் எப்போதும் சிறந்ததற்கே  தகுதியானவர்கள் என்றும் ஊக்குவிக்கப்படும் குழந்தைகள், சில சமயங்களில் மற்றவர்களின் இழப்பில் சுயநலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios