மனித உடலில் உள்ள தச வாயுக்கள் குறித்த சுவாசியமான உண்மைகள் பற்றி காணலாம்.
மனித உடலில் நவ துவராங்கள் இருப்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் அதைப் போலவே தச வாயுக்கள் இருப்பது தெரியுமா? நமது உடலில் 10 வித வாயுக்கள் உள்ளன. ஆக்சிஜன், கார்பன் டை ஆக்ஸைடு இந்த இரண்டு வாயுக்கள் உள்சுவாசம், வெளிசுவாசம் மூலம் பரிமாறப்படுவதால் தான் மனிதர்கள் உயிர் வாழ முடிகிறது.
ஆக்சிஜன் தான் மனிதனை வாழ வைக்கும் வாயுவாகும். கொரோனா பரவிய காலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிபோன உயிர்கள் ஏராளம். ஆனால் இவை தவிரவும் உடலில் 10 வாயுக்கள் உள்ளன. இந்த பத்து வாயுக்கள் உடலில் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகள் தான் நோய்களுக்கு கூட காரணமாகிறது. இந்தப் பதிவில் அவை குறித்து அறியலாம்.
தச வாயுக்கள்:
சுவாசிக்கும்போது நாசி வழியாக உள்ளிழுக்கும் காற்றானது பத்து விதமாக உடலுக்குள் பரவுமாம். மூக்கு, வாய், குதம், உடல் செல்கள், இரைப்பை ஆகிய ஐந்து வழியாக வெளியேறும் காற்றுகள் தான் இயங்கும் காற்று வகையை சேர்ந்தவை. அடுத்து சொல்லப் போகும் காற்றுகள் நிற்கும் காற்று வகையை சேர்ந்தவை.
கண்கள் சுழல உதவுகிற காற்று, கண்கள் இமைக்க உதவுகிற காற்று, கொட்டாவியாக வெளியேறும் காற்று, இருமல், தும்மல் வரவழைக்கும் காற்று இவை தவிர்த்து பத்தாவதாக தனஞ்செயன் எனும் உடலைச் சிதைக்கும் காற்று உள்ளது. இதில் முதலில் சொன்ன 9 வகை காற்றை நாம் அனுபவித்திருப்போம். பத்தாவதாக வரும் தனஞ்செயன் காற்று தான் உடலை சிதைப்பதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இது தமிழ் சமூக முன்னோர் தவிர வேறு யாருக்கும் தெரியாத விஷயமாகும்.
தனஞ்செயன்:
இந்த காற்றை ஒருவிதமான விசக்காற்று என சொல்கின்றனர். இது எல்லோருடைய உடலிலும் உற்பத்தியாகக் கூடியது. தனஞ்செயன் காற்று மனித உடலில் உயிரை தேடக் கூடியது. உயிர் இருந்தால் தனஞ்செயன் வாயு எதுவும் செய்யாது. ஆனால் உயிர் பிரிந்தால், உடல் பிணமான பின்னர் உடலில் உள்ள மற்ற தசவாயுக்களை தன்னுடன் வெளியேற்றி கொண்டு சென்றுவிடும். இறந்த உடலின் செல்களை முற்றிலும் அழிக்கும் பணியை செய்யும். இதன் காரணமாகவே மனிதன் இறந்த சில மணி நேரத்தில் அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது.
இப்படி ஒரு காரணமா?
இறந்தவர் உடலின் காது, மூக்கில் பஞ்சை வைத்து அடைப்பது கூட தனஞ்செயன் வாயு வெளியேறாமல் இருக்கத்தான். அது வெளியேறினால் பிணத்தின் அருகில் உள்ளவர்களை பாதிக்கலாம். பிணத்தின் அருகே அழுபவர்கள் மயங்கி விழ சோகம் மட்டுமல்ல, தனஞ்செயன் வாயுவும் காரணமாக இருக்கலாம். இதன் காரணமாகவே ஒறந்த வீடுகளில் பிணத்திற்கு பஞ்சு வைத்து அடைக்கிறார்கள். அருகில் செல்ல வேண்டாம் என தடுக்கிறார்கள். இவை ஆதிகால சித்தர்கள் விட்டு சென்ற ஆச்சர்ய உண்மைகள் என்றால் மிகையாகா!!


