நினைவலையில் செப் 11...! அன்றே சொன்னார் விவேகானந்தர்...! 

18 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் நகரில் கம்பீரமாக இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை, அல்கொய்தா தீவிரவாதிகள், விமானம் மூலம்  தகர்த்தெறிந்த செப்டெம்பர் 11  ஆம் நாள் மறக்க முடியுமா..? அமெரிக்காவிற்கு சொந்தமான 4 பயணிகள் விமானத்தை கடத்தி வரத்தக கோபுரத்தின் மீது மோத வைத்து அப்பாவி மக்களை கொன்றனர்.

ஆனால் 1893 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி சிகாகோவில் நடந்த  உலக மாநாட்டில் விவேகானந்தர் தன்னுடைய பேச்சால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் . அப்போது,  "எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

விவேகானந்தரின் பேச்சு அங்கிருந்த பார்வையாளர்களை மெய்  சிலிர்க்க வைத்தது..காரணம்..."பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையில் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ”

செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இவ்விரு நிகழ்வுகள் இரு வேறுபட்ட உணர்வுகளை கொடுக்கிறது. அவற்றின் மாறுபட்ட செய்திகளுக்கும் இடையில் நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பது தான் முக்கியம். ஒன்று 1893 இல் விவேகானந்தர் இந்த உலகத்துக்கு ஆற்றிய அற்புதமான உரை மற்றொன்று 2001 இல் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தகர்ப்பு ... நாம் எதை தேர்வு செய்கிறோமோ அதை தான் இவ்வுலகில் விதைக்கிறோம்..! the world depends on our choice.