லிப் லாக், பிரெஞ்ச் கிஸ், நூலிழை இடைவெளியின்றி கட்டியணைத்து கொள்வது, விதவிதமான பரிசுகள், கேண்டில் லைட் டின்னர், ஆடம்பரச் செலவு, வெளிநாடு சுற்றுப்பயணம், கலவி தான் ரொமாண்டிக்கா என்ன??

தினமும் கணவர் வேலைக்கு கிளம்பும்போது தன்னை கட்டியணைத்து கன்னத்திலும், நெற்றியிலும் முத்தமிட்டுச் செல்வதாகக் கூறும் ஒரு மனைவி அதை விட ரொமாண்டிக்கானது இருக்குமா ? என்று கேட்கிறார். ஊரில் இல்லாவிட்டாலும் போன் மூலம் முத்தம் தொடருமாம்

தாங்கள் இருவரும் எந்தக் காரணமும், சூழலும் இன்றி அவ்வப்போது ஒரு லாங் டிரைவ் செய்வதாகவும், அப்போது தனது கணவர் தனக்கு பிடித்த பாடல்களை ஒளிபரப்புவதோடு அதை ஹம்மிங்கும் செய்வதாகக் கூறுகிறார் மற்றொருவர்.

ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வீடு திரும்பிய உடன் என்னதான் சோர்வாக இருந்தாலும் தனது கணவர் இன்று உனது நாள் எப்படி இருந்தது என விசாரிக்கத் தவறியதில்லை என்கிறார் ஒரு பெண்

தனக்கு எவ்வளவு வேலை தான் முடித்துவிட்டு வரும் வரை காணவர் ஹாலில் காத்துக்கொண்டிருப்பாரே தவிர தன்னை விட்டு முன்னதாகவே சென்று படுத்ததில்லை என்கிறார் ஒரு மனைவி. தானும், அவரது வேலை முடியும் காத்திருப்பது உண்டு என்கிறார்.

படுக்கை அறையில் தான் அவரது தோளில் தலை வைத்து படுத்துக்கொள்ள விரும்புவது வழக்கம் என்றும் அப்போது அவர் தன்னை அரவணைத்துக்கொள்வார் என்றும் கூறும் மனைவி, புறா கூண்டில் குஞ்சுகள் தஞ்சம் அடைந்தது போன்ற அந்த உணர்வை விட பெரிய ரொமாண்டிக் வேறேதும் இல்லை என்கிறார்.

தன் கணவருக்கு கிரீன் டீ தயாரிக்க கற்றுக் கொடுத்ததாகக் கூறும் ஒரு பெண், தான் கற்பித்த ஒன்றை, அவர் முறையாக பின்பற்றுவதை ஒவ்வொரு முறை காணும் போதும் அவர் மீது அளவில்லா காதல் பெருகுவதாகக் கூறுகிறார்.

திரையரங்குகளுக்குச் செல்லும்போது இருக்கையில் அமரும் வரை கணவர் தனது கையை விட்டதே இல்லை என்று கூறும் ஒரு மனைவி, கூட்ட நெரிசலில் அவர் கையைக் கோர்த்து ஒரு குழந்தையைப் போல தன்னை பக்குவமாக அழைத்து செல்வதை ரசித்திருப்பதாக தெரிவிக்கிறார்.

தான் ஏதாவது தவறோ, உதவியோ செய்தாலும், அல்லது தனது கணவரே ஏதாவது செய்தாலும், அது தொடர்பக ஏதாவது பேசுவதற்குப் பதில் அவர் மவுனமாகப் புன்னகைப்பார் என்று தெரிவிக்கும் மனைவி அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாகவும் அவர் புன்னகைக்கும் போதெல்லாம் காதல் பெருகும் என்றும் கூறுகிறார்.

தான் சமையலில் திறமையானவள் அல்ல என்ற போதும், யூடியூப், சமையல் புத்தகங்கள் உள்ளிட்டவை மூலம் தான் முயற்சிக்கும் உணவு வகைகளை தனது கணவர் சிறப்பாக பாராட்டுவார் என்று கூறும் ஒரு பெண் தன் முயற்சிக்கு கணவரது பாராட்டு விலைமதிப்பற்றது என்கிறார்.

தன் கணவருக்கு விதவிதமாக தாடி மீசை வைத்துக்கொள்ள ஆசை இருந்த போதும், அவை இல்லாமல் இருந்தால் அழகாக இருக்கிறீர்கள் தான் கூறியதையடுத்து க்ளீன் ஷேவ் செய்துகொள்வதாகவும், அது தனக்கு பெருமிதமாக இருப்பதாகவும் கூறுகிறார் ஒரு மனைவி.

தன் கணவர் தனது உறவினர்கள் உட்பட யார் முன்னிலையிலும் தன்னை விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை என்று கூறும் ஒரு மனைவி தவறு தன் மீது இருந்தாலும் தனியாக அழைத்துத்தான் கூறுவார் என்றும், மனம் புண்படும்படி பேசமாட்டார் என்றும் கூறுகிறார்.