what a hair style ? wow trump sir...

மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறி போயிடிச்சி...என்ற பாடலுக்கு ஏற்றவாறு தற்போது எல்லாமே மாறி போய் விட்டது தான்....

உன் நடைஎன்ன....உன் அழகு என்ன சொல்வதெல்லாம் பழமையாகி.... உன் ஆடை என்ன...உங்கள் செருப்பு என்ன அழகு...காதில் என்ன வளையம்....தலையில் என்ன புது முடி என பொருள்படாத வித்தியாசமான கேள்வியை கேட்கும் வண்ணம் அமைந்து விட்டது இன்றைய நிலைமை அல்லவா...

தற்போது இதனை எல்லாம் மீறி,வாலிப வயதினர் அதாவது இன்றைய தலைமுறையினர் தங்கள் தலையில் ஹேர்ஸ்டைல் செய்துக்கொள்ளும் முறையை பார்த்தால் என்ன சொல்வதே என்றே தெரியாது.....

இதற்கெல்லாம் புதுமையாக தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சலூன் கடையில் தைவானை சேர்ந்த ஆலன் சேன் என்பவர் தலைமுடியில் டேட்டுக்களை உருவாக்கும் பணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்

அதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உருவத்தை, தலையில் டேட்டுக்களாக வரைய கேட்கின்றனர்.

அதன்படி,அவர் பொன்னிற முடியில் டிரம்பின் உருவப்படத்தை வரைந்திருக்கிறார்.இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது