wet hair fall problem solution

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். ஆனால் தற்போது வேலை சுமை, தண்ணீர் மாறுதல், மட்டும் மாசு உள்ளிட்ட காரணங்களால் முடி அதிகமாக கொட்டி விடுகிறது. அதிலும் பல ஆண்களுக்கு 30 வயதை எட்டுவதற்கும் நெற்றி ஏறி விடுகிறது.

பொதுவாகவே பெண்கள் முதல் ஆண்கள் வரை பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதுக்குள், அவர்களும் ஒரு வழியாகியாகி விடுவார்கள். இதிலேயே நிறை முடி கொட்டிவிடும்.

தலை முடி கொட்டுவதை தடுப்பது எப்படி. முக்கியமாக தலை குளித்ததும் கொத்து கொத்தாக கொட்டும் முடியை தடுப்பது எப்படி என்பதை இப்போது பாப்போம். 

* தலை குளித்து முடித்தபின் ஸ்டைலிங் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். குறிப்பாக பெண்கள் இதன் மூலம் தலைமுடி சிக்கல் விழாமல் தடுக்கப்படும்.

* தலையைத் துவட்டும் போது ஆண்கள் பெண்கள் இருவரும், டவலால் அழுத்தித் துவட்டக்கூடாது. ஈரமான கூந்தலை அழுத்தித் துவட்டும் போது, முடி எளிதில் கொட்டும்.

* முடிந்த அளவு ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் முடிந்தவரை கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடவேண்டும்.

* அடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈர முடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும் போது முடி உதிர்வது அதிகமாகும்.

இந்த முறைகளை பயன்படுத்தினாலே போதும் ஈர முடி கொட்டுவதை தடுத்து விடலாம்.