அசால்டாக 46 கிலோ எடையை குறைத்த டெல்லி ஐபிஎஸ் ஆபிசர்... இப்படி மட்டும் பண்ணுங்கனு அட்வைஸ்!

டெல்லியை சேர்ந்த ஐபிஎஸ் ஆபிசர் ஜிதேந்திர மணி வெறும் 8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட உணவு பழக்கங்கள் மிகவும் எளிமையானவை. 

weight loss journey of Jitendra Mani IPS officer

நம்மில் பலர் எடையை குறைக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள தவறிவிடுவோம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் அதற்கான முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு தான் வருகிறார். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த மெட்ரோ காவல் துணை ஆணையர் ஜிதேந்திர மணி தன் முயற்சியால் 130 கிலோவிலிருந்து சுமார் 46 கிலோவை குறைத்து காட்டியுள்ளார். 

இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். முறையான உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்களை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த எடை குறைப்பு பயணம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. எட்டு மாதங்களில் 46 கிலோ எடையை அவர் குறைத்ததன் மூலமாக பல உடல் நலப் பிரச்சினைகளையும் சமாளித்துள்ளார். ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். அதிக உடல் எடையால் இவர் பல உடல் நலப்பிரச்சனைகளை சந்தித்தார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை அவருக்கு அதிக நெருக்கடி கொடுத்த நோய்கள். 

mani

நோய்களால் அவரது நிம்மதி தொலைந்தது. காவல் துறையில் பணியாற்றும் அவர் முழுமையான பணியில் ஈடுபட முடியாமல் தவித்தார். அதனால் எடையைக் குறைக்க முடிவு செய்தார். 

இதையும் படிங்க; Cancer: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்... ஆளி விதையில் கிடைக்கும் தீர்வு!

என்ன செய்தார்? 

தினமும் உண்ணும் உணவில் முதன்மையாக மாற்றத்தை மேற்கொண்டார். கடந்த எட்டு மாத காலமாக ரொட்டியும், சோறும் இவரது உணவு பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டன. சூப், பழச்சாறு, சாலட் ஆகியவற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டார். இந்த உணவு பழக்கத்தை அவர் தொடர்ந்து கடைபிடித்ததால் தான் அவரது பிட்னஸ் பயணம் வென்றது. 

உடற்பயிற்சி 

டிசிபி மணி உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் 15 ஆயிரம் காலடிகள் (Steps) நடந்தார். ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 4.5 லட்சம் காலடிகள் நடந்து முடித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும்போது, கிட்டத்தட்ட 32 லட்சம் காலடிகள் வரை நடந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். தற்போது டிசிபி ஜிதேந்திர மணி 84 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரது ஆரோக்கியமான பயணத்தை காவல் ஆணையர் சஞ்சய் அரோரா பாராட்டினார். அத்துடன் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்ட விழாவில், காவல் துறை சார்பில் அவருக்குப் பாராட்டுச் சான்றிதழும்  வழங்கப்பட்டது.  

இதையும் படிங்க; Masala tea: பசியை போக்கி டக்னு எடை குறைய வைக்கும் மகத்தான மசாலா டீ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios