Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் கொழு...கொழுவென அமுல் பேபி போல மாற வேண்டுமா...? இந்த 5 வகை புரோட்டீன் ஷேக் ட்ரை பண்ணுங்கோ?

உடல் எடையை அதிகரிக்க முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

Weight gain tips
Author
Chennai, First Published Jan 17, 2022, 11:21 AM IST

உடல் எடை அதிகமாக இருப்பது, ஒரு சிலருக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். அதுபோல ஒல்லியாக இருக்கும் சிலர் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி, உடற்பயிற்சியை கைவிடுவது, உணவைத் தவிர்ப்பது, ஃபிட்னஸ் பிரியர்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது போன்ற தவறான முயற்சிகளை மேற்கொள்வர்.இவைகள் உங்கள் உடலுக்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கும். 

மாறாக, உடல் எடையை அதிகரிக்க, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அனைவரும் அறிந்த பொதுவான வழிமுறைகள் ஆகும். இவற்றை தவிர்த்து, உடல் எடையை கணிசமாக அதிகரிக்க புரோட்டீன் ஷேக்குகளை பயன்படுத்துவது நல்ல பலன் தருகிறது.

எடை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்று வரும் போது ஒரு சிலருக்கு மிகவும் கடினமான ஒன்றாகவும், ஒரு சிலருக்கு மிக எளிதான ஒன்றாகவும் இருக்கும். அப்படி, உடல் எடையை அதிகரிக்க முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் எவ்வளவு முயற்சித்தும் சில கிலோ எடையை கூட உங்களால் அதிகரிக்க முடியவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

பீனட் பட்டர் பனானா புரோட்டீன் ஷேக் (Peanut Butter Banana Protein Shake): 

Weight gain tips

வேர்க்கடலை, பட்டர் மற்றும் வாழைப்பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பீனட் பட்டர் பனானா புரோட்டீன் ஷேக் உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும். இதை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம் மற்றும் குறைந்த செலவே ஆகும்.

டார்க் சாக்லேட் பாதாம் பட்டர் புரோட்டீன் ஷேக் (Dark Chocolate Almond Butter Protein Shake): 

உடல் எடையை அதிகரிக்கும் விஷயத்தில் முதலில் குறிப்பிட தகுந்த புரோட்டீன் ஷேக்குகளில் சிறந்த ஒன்றாக இருப்பது இந்த டார்க் சாக்லேட் பாதாம் பட்டர் ஷேக் ஆகும். டார்க் சாக்லேட் மற்றும் பாதாம் வெண்ணெய் (almond butter) ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புரோட்டீன் ஷேக்கில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் அடங்கி இருக்கிறன. எனவே இந்த ஷேக் உடல் எடையை அதிகரிக்க சிறப்பாக உதவுகிறது.

அவகேடோ சாக்லேட் புரோட்டீன் ஷேக் (Avocado Chocolate Protein Shake): 

நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் மேற்கண்டவற்றை போலவே இந்த அவகேடோ சாக்லேட் புரோட்டீன் ஷேக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த புரோட்டீன் ஷேக்கை தயார் செய்ய நீங்கள் சாக்லேட் மற்றும் அவகேடோவை ஒன்றாக பயன்படுத்தலாம். எடையை அதிகரிக்க செய்வதில் இது ஒரு சிறந்த கலவையாக செயல்படும்.

பனானா மற்றும் ஸ்ட்ராபெர்ரி புரோட்டீன் ஷேக் (Banana and Strawberry Protein Shake): 

வாழைப்பழம் எடையை அதிகரிக்க நன்றாக உதவுகிறது. எனவே, வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை மட்டுமே கொண்டு கூட புரோட்டீன் ஷேக் செய்து சாப்பிடலாம். இந்த ஷேக் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமாது என்பதோடு சுவையாகவும் இருக்கும்.

பனானா, மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெர்ரி புரோட்டீன் ஷேக் (Banana, Mango and Strawberry Protein Shake): 

Weight gain tips

உடல் எடையை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி மாம்பழம், வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி புரோட்டீன் ஷேக் ஆகும். இந்த புரோட்டீன் ஷேக் செய்வதும் மிகவும் எளிதானது மற்றும் சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். எனவே இந்த ஷேக்கை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதன் மூலம் உங்கள் எடையை நினைத்தபடி வேகமாக அதிகரிக்கலாம்.

மேற்கூறியவற்றை பின்பற்றி, நீங்கள் உடல் நலத்துடனும், ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க வாழ்த்துக்கள்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios