wear high heels have more defects in your health
குள்ளமான பெண்கள் மட்டுமல்ல உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிந்து ஒய்யாரமாக நடக்கவே விரும்புவார்கள். இதனால் அவர்களின் நடை மட்டுமல்ல தோற்றத்திலும் ஸ்டைலாக மாறிவிடுகின்றனர்.
இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகள் எல்லாம் வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே பயன்படுத்தினர். பின்பு சினிமா துறை வளர்ச்சி அடைந்ததும் தமிழ் சினிமா நடிகைகள் பயன் படுத்த ஆரம்பித்தார்கள். பின் பெண்கள் அதன் மேல் ஈர்ப்பு கொண்டு வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ராம்ப் வாக் மாடல்கள் பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் அல்ட்ரா மாடனுக்கான விசயமாகக் கருதப்படுவதால் பெண்கள் தங்களுக்கு கஷ்டமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.
ஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்ஷன் கூட பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடுகிறது. நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், கர்ப்பப்பை பாதிப்பு போன்ற உபாதைகள் வர காரணமாகிவிடுகின்றன. முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளே.

இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களிலுள்ள எலும்புகள் அழுத்தப்பட்டு சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தீரா வலியாகி விடுகிறது.
உயரமான காலணிகள் மட்டுமல்ல உடலை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ்கள் இடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் கூட இடுப்பு வலியை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
