பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிநாதன் சதீஷ் வசந்த குமார் ஆகியோருக்கு எதிராக சக கைதிகளே போராட்டத்தில் ஈடுபட்டு  உள்ளனர். 

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளை குறிவைத்து முகநூல் மூலமாக பழகி காதலில் விழ வைத்து ஆசை வார்த்தை கூறி அவர்களை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளது போலீசார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ், சபரி நாதன், வசந்தகுமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மூன்று பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருக்கும் அறையில் அடைக்க கோரி சக கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே சக கைதிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.