we should not use this oil for lightening
மறந்து கூட இந்த எண்ணெயில் தீபம் எற்றாதீங்க.....!
தீபம் எற்றுவதே தனி அழகு தான்.... நம் வீட்டில் பூஜை அறையில் விலகு ஏற்றும் போது, அதிலிருந்து வரும் அந்த ஒளியால் பிரகாசமாக தெரியும் அல்லவா...
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்....
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு எந்த நேரத்திலும் மறந்து கூட விளக்கு ஏற்ற வேண்டாம்..

இந்த மூன்று எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால், மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்கும் வல்லவை இந்த எண்ணெயின் மூலம் ஏற்றப்படும் தீபத்திற்கு உண்டு என்பதை யாரும் மறந்து விடாதீர்.....
எண்ணெயின் பலன்கள் :
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொருத்து பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.
.jpg)
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.
வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவிபெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.
