வீட்டில் மகிழ்ச்சி இல்லையா..? உங்கள் வீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்..! 

நம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், செல்வம் வந்து சேரவேண்டும் எனவும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து வழிபடுவார்கள் அல்லவா ? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அழகுக்காக வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சில தாவரங்கள் கூட நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கக் கூடும் என தற்போது தெரியவந்துள்ளது, அதன்படி, சாஸ்திரம் கூறும் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக நம் வீட்டில் வளர்க்கக்கூடிய மணி பிளான்ட் எதிர்மறை ஆற்றலை தான் கொடுக்கும் என கூறுகிறது. அதேபோன்று முட்கள் உள்ள தாவரங்கள் எதையும் வீட்டில் வளர்க்கக்கூடாது. ஆனால் சோற்றுக்கற்றாழை மருத்துவ குணம் கொண்டதால், அவற்றை மட்டும் வீட்டில் வளர்க்கலாம் என்கிறார்கள். மேலும் ரோஜா செடியையும் வீட்டில் வளர்க்கலாம் என்கிறார்கள். ஆனால் வேறு எந்த முட்கள் கொண்ட செடியையும் வளர்க்க கூடாது என்கிறது சாஸ்திரம். 

சிவப்பு நிற மலர்களை கொடுக்கக்கூடிய போன்சாய் மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என்கிறார்கள். ஆனால் தோட்டம் இருந்தால் தோட்டத்தில் வளர்க்கலாம். இதேபோன்று புளியமரம் வீட்டின் அருகில் இருக்கக் கூடாதாம்.  எனவே புளியமரம் இருக்கக்கூடிய இடங்களில் வீடு கட்டுவதை தவிர்ப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் மிக எளிதில் வாடக்கூடிய செடிகள் அதாவது பஞ்சு போன்ற செடிகள் தெரியாமல் கூட வீட்டில் வளர்க்கக்கூடாது. அது எவ்வாறு காய்ந்து விடுகிறதோ அதே போன்று நம் குடும்பமும் பொலிவிழந்து போகும் நிலை வரலாம் என்கிறது சாஸ்திரம்.

புளியமரத்தை போன்றே பனைமரமும் வீட்டின் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள கூடாது அதே போன்று பூத்தொட்டியில் விடக்கூடிய செடிகளையும் வீட்டில் வளர்க்க கூடாதாம் . வீட்டில் தொங்கியவாறு உள்ள பூச்செடிகள் மூலம் எதிர்மறை எதிர்மறை சக்திகளை அதிகம் கொடுக்கும். அதாவது நெகட்டிவ் எனர்ஜியை கொடுக்கும் என்கிறார்கள் எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

இது போன்ற செடிகளை  நம் வீட்டில் வளர்த்தால், எதிர்மறை சக்திகள் அதிகரித்தும், வீடே பொலிவிழந்து காணப்படும் என்கிறது பெங் சுய் சாஸ்திரம். ஆக மொத்தத்ததில் குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காது என்கிறார்கள்.