we should not do marraige on our bitthday
பிறந்தநாளன்று திருமணம் செய்ய கூடாது ....! உங்களுக்கு தெரியுமா ..?
ஆண்டு தோறும் பல விழாக்கள் மற்றும் பண்டிகைகள் வந்தாலும் , பிறந்த நாள் என்பது தனிபட்ட சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்நாளில் பல நல்லது செய்தாலும் ஒரு சிலவற்றை செய்யவே கூடாது என இருக்கும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது.
குறிப்பு : அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
இது போன்ற பல விசியங்களை நாம் , நம் பிறந்த நாளன்று செய்யவே கூடாதே என்பது குறிப்பிடத்தக்கது .
