we need to understand about 18 steps of iyappan temple
பதினெட்டு படிகளின் தத்துவம் :
பதினெட்டு படிகளை ஏறி சென்று ஐயப்பனை காணும் பக்தர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்துகொள்ள வேண்டும்.
1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள் என்ன என்பதை பார்க்கலாம்
வில், வாள், வேல், ,கதை அங்குசம், பரசு,பிந்திபாவம்,பரிசை,குந்தம்,ஈட்டி,கை வாள்,முன்தடி,கடுத்தி வை,பாசம், சக்கரம் ,ஹலம், மழு, முஸலம்
ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்
2) பதினெட்டுப் படிகள் ..!
இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )
என்று கூறுகிறார்கள் அவை முறையே
இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :
கண்
காது
மூக்கு
நாக்கு
கை கால்கள்
புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :
பார்த்தல்
கேட்டல்
சுவாசித்தல்
ருசித்தல்
ஸ்பரிசித்தல்
கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :
அன்னமய கோசம்
ஆனந்தமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
ஞானமய கோசம்
குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :
ஸத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தி வாழும் நெறியை தான் 18 படிகளும் உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
