அட்சய திருதியை தினமான இன்று நாம் செய்யும் எந்த ஒரு நல்ல விஷயமும் கண்டிப்பாக கோடி நன்மைகளை கொடுக்கும். அந்த வகையில் இன்று நாம் மறக்காமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.அதில் குறிப்பாக மற்றவர்களுக்கு தானம் செய்வது சிறந்தது.

அதன்படி எந்தெந்த பொருளை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.சந்தனம் தானம் செய்தால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கலாம். தேங்காயை தானம் செய்தால் பித்ருக்களுக்கு மிகவும் நல்லது. தயிர் மோர் போன்றவற்றை தானம் செய்தால் உயர் கல்வி யோகம் நமக்கு கிடைக்கும். தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தை நாம் பெறலாம். வெள்ளிக் குடத்தில் துளசி வெற்றிலை கலந்த புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

செருப்பு இல்லாதவர்களுக்கு செருப்பை வாங்கி கொடுத்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் உள்ள தடைகள் நீங்க கோடை காலத்தில் மக்களுக்கு குடைகளை தானம் செய்யலாம்.

மழை பெய்து சுபிட்சமடைய கோதுமையை தானம் செய்ய வேண்டும்.  குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும். உணவை தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். பழவகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை இன்று கிடைக்கும். அதேபோன்று ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். 

எனவே இன்றைய தினத்தில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி மாக்களுக்கு தானம் செய்வது நல்லது.