WE NEED TO DO 27 LIGHTNING TODAY
கார்த்திகை மாத தீப திருநாளான இன்று, ஜக ஜோதியாக இன்னும் சற்று நேரத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளது....
அனைத்து வீடுகளிலும் பெண்கள் மங்களகரமாக தீபம் ஏற்றுவதில் மும்முரமாக உள்ளனர்...
தீபம் ஏற்றும் போது கண்டிப்பாக தெற்கு திசையை நோக்கி ஏற்றக்கூடாது.....
அதே சமயத்தில் எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா ?
27 தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும் எனபது ஐதீகம்
வீட்டுவாசலில் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் தெரியுமா ?
வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது.
சிவனருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
தீப திருநாளான இன்று,நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.


எத்தனை முகம் கொண்ட அகலில் ஏற்ற வேண்டும் தெரியுமா ..?
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி... வாழ்வில் நலம் பெறுதல் நல்லது....
