We need to consider this too while searching good time
நல்ல நேரம் பார்க்கும்போது இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்...!
எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யத் துவங்கும் முன் நல்ல நேரம் பார்த்து செய்வது என்பது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு நல்ல நேரம் பார்க்கும்போது கவனிக்க வேண்டியவைப் பற்றி பார்ப்போம்.
நல்ல நேரம் பார்க்கும்போது அன்றைய தினம் கரிநாளாக இருக்கக் கூடாது.அன்றைய தினம் அஷ்டமி நவமி திதிகளை தவிர்க்க வேண்டும்.
யோகம் மரண யோக வேளையாக இல்லாமல் சித்த அமிர்த யோகமாக இருக்க வேண்டும்.ஓரைகளில் சூரியன் செவ்வாய் சனி ஓரை இல்லாமல் பிற சுப ஓரைகள் இருந்தால் நல்லது.
பஞ்சகங்களில் பொதுவாக அக்னி சோர ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அக்னி சோர ரோக பஞ்சகங்களில் திருமணம் சீமந்தம் புதுமனை புகுதல் போன்ற காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் பங்குத் தொழில் லிமிடேட் கம்பெனி போன்ற தொழில்களை மிருத்யு பஞ்சகத்தில் ஆரம்பிக்கக் கூடாது.
பஞ்சு பெட்ரோல் பொருட்கள்இ நூல்இ துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆகியவற்றை அக்னி பஞ்சகத்தில் தொடங்கக் கூடாது
அரசு மற்றும் பொது நிறுவனங்கள் கடன் வாங்கி நடத்தும் தொழில்களை ராஜ பஞ்சகத்தில் ஆரம்பிக்கக் கூடாது.
நிஷ் பஞ்சகத்தில் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். நல்ல நேரம் பார்க்கும்போது அவருடைய நட்சத்திரத்திற்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது என்பது கூடுதல் தகவல்
இது போன்ற பல நேரங்களை கருத்தில் கொண்டுதான் நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம்.
