we have to use the inner wear as per particular time

உங்கள் ஜட்டியின் காலாவதி நாள் தெரியுமா?

எந்த பொருளை எவ்வளவு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என அனைத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு அதாவது காலக்கெடு உண்டு.அந்த வகையில் எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு காலக்கெடு என்பதை பார்க்கலாம். 
முதலில் மிக முக்கியமானவைகளில் ஒன்றான உள்ளாடைகளை எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்
ஒரு சிலர் இரண்டு மூன்று வருடத்திற்கும் மேலாக ஒரே உள்ளாடையை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வருவார்கள். அந்தரங்க பகுதியில் அரிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு மருந்து வாங்கி போட்டும் பயனில்லை என கருதும் இவர்கள், அதற்கு முக்கிய காரணமே அவர்களது பழைய உள்ளாடைகள் தான் என அறிந்திருக்க மாட்டார்கள். 

உள்ளாடைகள் மட்டுமல்ல, குளியல் டவல், டூத் பிரஷ், குழந்தைகள் பீடிங் நிப்பிள், தலையணை, மெத்தை விரிப்பு என நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் ஒரு காலாவதி நாள் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம் 

உள்ளாடை
வருடத்திற்கு ஒருமுறை மாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு,எரிச்சல், புண் போன்றவை அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும். முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும்.சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஆண் தினமும் காலையில் சுத்தமாக உள்ளாடை அணிவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது.

குளியல் டவல்

வருடத்திற்கு ஒரு முறை குளியல் டவலை மாற்ற வேண்டும். குளியல் டவலில் சீக்கிரம் பைபர் தன்மை இழப்பு நேரிடும். இதனால் அதில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க துவங்கும். நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும், அதில் பாக்டீரியா தான் அதிகரிக்குமே தவிர, உங்களுக்கு நன்மை விளைவிக்காது

நாம் பயன்படுத்துவதில் மிக முக்கியமான ஒன்றான உள்ளாடை மற்றும் டவல் இவை இரண்டையும் எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை பார்த்தோம்.இதே போன்று மற்றவற்றையும் எத்தனை நாட்களுக்குள் மாற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.