we have to take food at right time siad venkatesan bath

8 மணிக்கு சாப்பிடலனா...அதுக்கு மேல சாப்பிட உங்களுக்கு அருகதையே இல்லை...

பிரேக் பாஸ்ட்

உணவருந்த சில முறைகள் உள்ளது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே..ஆனாலும் அதனை நாம் யாரும் பின்பற்றுவதில்லை அல்லவா..?

அதிலும் குறிப்பாக பிரேக் பாஸ்ட் சாப்பிடாமல் இருந்தால் மிகவும் தவறு என கூறுகிறார் உணவு கலை வல்லுநர் வெங்கடேஷ் பாத்

8 மணி பிரேக் பாஸ்ட்

8 மணி பிரேக் பாஸ்ட் சாப்பிடவில்லை என்றால், அதன் பிறகு சாப்பிட எந்த அருகதையும் கிடையாதாம்....அதாவது 8 மணி பிரேக் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெளிவாக கூறி உள்ளார்

ஒருவேளை சாப்பிடாமல் படுத்தால்,அசிடிட்டி மட்டும் தான் வரும், ஆனால் காலை 8 மணிக்கு சாப்பிடாமல் நேரம் தாழ்ந்து சாப்பிட்டால் லிவ்வர் கான்சர் வரும் என தெரிவித்து உள்ளார்.

அதே போன்று இரவு நேரத்தில் அசைவ சாப்பாடு

இரவு நேரத்தில் அசைவ சாப்பாடு சாப்பிட்டால், நம்முடைய உடல் உறுப்புக்கள் அதனை ஜீரணிக்க முடியாமல் பல சிரமத்திற்கு உள்ளாகுமாம்.இதன் காரணமாகத்தான் 35 வயதை கடக்கும் போது நம்ம உடலில் பல பிரச்சனைகள் வருகிறது என்பதை உணர்த்துகிறது.

எதை சாப்பிட்டாலும்,எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் 35 வயது வரை நம் உடல் ஒத்துழைப்பு கொடுக்கும், அதற்கு மேல் ஆட்டம் காண்பிக்க தொடங்குமாம்..

எனவே இதுவரை உணவு பழக்க வழக்கத்தில் எதையும் சரியாக பின்பற்றி இருக்க மாட்டோம்..ஆனால் இனியாவது சரியான நேரத்தில் சரியான உணவை உண்பது நல்லது

அதே வேளையில் பொதுவாகவே அசைவ உணவை தவிர்த்து கீரை கூட்டு,,காய் கறிகள் அதிகம் உண்டு வாழ்ந்தால் நன்மை பயக்கும்.