இதற்கு முன்னாடி தெரிஞ்சோ தெரியாமலோ இருந்துட்டோம்.. இனியாவது இதை செய்தே ஆக வேண்டும்..! 

நம் முன்னோர்கள் செய்த எந்த ஒரு காரியத்திற்கு பின்னும் ஏதாவது ஒரு அறிவியல் உண்மை மறைந்து தான் இருக்கும். அந்த வகையில் முன்னோர்கள் கூறி உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கே பார்க்கலாமா..? 

வயது வந்த பெண்களை தகுந்த காலத்தில் தகுந்த வரனுக்கு தங்களின் வசதிக்கு ஏற்ப திருமணம் செய்து தந்துவிடவேண்டும். பலனை எதிர்பார்த்து அவர்களின் திருமணத்தை தள்ளி வைத்தல் கூடாது.

கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு உண்ணக்கூடாது. ஆடை இல்லாமல் வெற்று உடலுடன் மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது. கர்ப்பமான பெண்கள் மன அமைதி தரும் பாடல்கள் மற்றும் அன்பு பாசம் தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது படிப்பது போன்றவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

பொதுவாக பெண்கள் அதிலும் குறிப்பாக கர்ப்பமான பெண்கள் நடுநிசியில் மயானம் மற்றும் பாழடைந்த கிணறு உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது. கிரகண காலங்களில் கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. கிரகண காலங்களில் வயிற்றில் உணவு இருத்தல் கூடாது. கிரகணத்திற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாக உணவு உண்டு விட வேண்டும். பெண்கள் மற்றும் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது. எந்த மத புராண இதிகாசங்களையும் படித்தோ அல்லது கேலி செய்தல் கூடாது வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதைகளில் அசுத்தம் செய்தல் கூடாது.

ஆண்டவன் வழிபாட்டுத்தலங்கள் உள்ள மலைகளில் மற்றும் அதன் வேறு எந்தப் பகுதியிலும் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் கூடாது. எந்த மத புராண இதிகாசங்களையும் கேலி செய்தல் கூடாது.

பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அசுத்தம் செய்வது கூடாது. பொருட்களில் எந்த கடவுள் படங்களை வைத்து வியாபாரம் செய்தல் கூடாது அது கடவுளை இழிவு செய்யும் செயலாகும்