அதிர்ச்சி..! வாட்ஸ் ஆப்பில் போட்டோஸ் வீடியோஸ் அனுப்ப முடியாமல் மக்கள் தவிப்பு..! ட்ரெண்டிங்கில் முதலிடம் #whatsappdown

அனைவராலும் தற்போது முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டுவரும் வாட்ஸ் அப் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாமல் மக்கள் தவித்து வருவதால் புது சர்ச்சை கிளம்பி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் சேவை தற்போது முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்து வாட்ஸ் ஆப்  நிறுவனம் இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பயனாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளதால் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ் அப் டவுன் என்ற ஹாஸ் டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் டவுன் என்ற ஹேஸ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலைப்பாட்டில் வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால் மக்களுக்கு கை கால் உடைந்தது போல் ஒரு எண்ணம் தோன்றும். அந்த அளவுக்கு எதற்கெடுத்தாலும் அது  சுய பயன்பாடாக இருந்தாலும் சரி... வியாபார ரீதியாக இருந்தாலும் சரி...புகைப்படங்கள் அனுப்புவது, உடனுக்குடன் மெசேஜ் ஷேர் பண்ணுவது என உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வீடியோ கால் மூலமாக பேசுவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலி இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில் கடந்த சில மணி நேரங்களாக புகைப்படத்தையோ காணொளியையோ அனுப்ப முடியாமல் இருப்பதால் பயனாளர்கள் சிரமத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.