ஒரே நேரத்தில் பல பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு பிரத்யேக குழு ஒன்றை அமைத்து உள்ளது.

அதன் படி ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்திலோ ஒரே காலகட்டத்தில் பல பாட பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அனுமதி வழங்க பல்கலைக்கழக மானியக் குழு ஆலோசனை செய்து வருகிறது.

இது குறித்து ஆலோசனை செய்ய யுஜிசி துணைத் தலைவர் பட்வர்தன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் வாயிலாகவோ பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வியில், ஒரே நேரத்தில் பயில்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்ன என்பதனை விவரிக்கும் விதமாக கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தொழில்நுட்ப வசதிகள் அதிக அளவில் உள்ளதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு வாய்ப்பு வழங்கலாமா என்பதை மீண்டும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் ஒரே நேரத்தில் பல படிப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.