திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது அம்மாநில அரசு.

தமிழ்நாடு மற்றும் கார்நாடக மாநிலத்திலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் தொடர்ந்து திருப்பதிக்குசென்று வருவது வழக்கம்.

தமிழ்நாடு மற்றும் கர்னாடக மாநில பேருந்துகள் திருப்பதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.அங்கிருந்து திருமலா செல்வதற்கு ஆந்திர மாநில அரசு  சார்பில்,பேருந்து இயக்கப்படுகிறது.

ஆனால் திருமலா வரை பேருந்து இயக்கப்படுவதால்,அங்கு காற்று அதிக  மாசு அடைவதாக தெரிகிறது.

இதனை கருத்தில் கொண்ட ஆந்திர மாநில அரசு, தற்போது  திருப்பதியிலிருந்து திருமலா வரை, இரண்டு எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

5-ந்தேதி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அன்றே அதன் தொடக்க விழா நடக்கிறது. இந்த இரு பஸ்களும் ஒரு மாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்கப்படும்.

இதற்காக நான்கு ஓட்டுனர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படு உள்ளது.

ஒரு பஸ்சுக்கு 3 மணிநேரம் முழு சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். அதன்படி பார்த்தால், திருப்பதியில் இருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை ஒரு எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படும். தற்போது டீசல் மூலம் இயக்கப்படும் பஸ் கிலோ மீட்டருக்கு ரூ.16 வரை செலவாகிறது. ஆனால், எலக்ட்ரிக் பஸ்சை இயக்குவதால் கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவாகிறது.

இந்த எலக்ட்ரிக் பஸ்சுக்கு என்ஜின், கியர் கிடையாது. பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், முன்னும் பின்னும் இயக்க வல்லது.

அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்ததாகும். ஒரு பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்தப் பஸ்சை வாங்கினால் மத்திய அரசு 60 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 31 இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பஸ்சை இயக்குவது வெற்றி பெற்றால், தொடர்ந்து இயக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த திட்டம் வெற்றி பெரும் தருவாயில் எலக்ட்ரிக் பேருந்துகள் அதிக அளவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப் படு உள்ளது.

மேலும் காற்றும் மாசு அடையாதவாறு பாதுகாத்து கொள்ள முடியும்