பள்ளி மாணவர்களுக்கு அற்புத செய்தி..!

பள்ளிகளில் இதுவரை கைகளால் நிரப்பப்பட்ட படிவங்களில் தான் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாகவே மாற்றுச் சான்றிதழை பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் டி.சி-யை அதாவது மாற்று சான்றிதழை ஆன்லைனில் தாங்களாகவே பெற்றுக் கொள்ளலாம். இதனை பெறுவதற்காக யூடிஎஸ் என்ற 11 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவிட்டால் பள்ளியின் இணையதளம் ஓபன் ஆகும்.

அதில் மாணவரின் எமிஸ் எண்ணை பதிவு செய்தால் அந்த குறிப்பிட்ட மாணவரின் முழு விவரம் அதில் காண்பிக்கும். தற்போது மாற்றுச் சான்றிதழை பெற மாணவ மாணவிகள் ஆன்லைனிலேயே முயற்சி செய்வதால் அவ்வப்போது இணையதளம் முடங்கி விடுகிறது.இதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையில் பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வித் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் கல்வித் திறன் மேம்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அதுமட்டுமல்லாமல் இது போன்ற தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து வளர்ச்சியையும் மாணவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும்படி செய்து அரசும் துணை நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.