ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.. அல்லவா....? ஆம் நாம் என்னதான் அழகாக இருந்தாலும் நாம் உடுத்தும் ஆடையை பொறுத்தே நம்மை மற்றவர்கள எளிதில் கணிக்க முடியும் என்பதை யாராலும் இல்லை என்று சொல்லி விட முடியாது...

அதாவது.... தூய்மையான ஆடைகளை உடுத்துவது என்பது வேறு... தரமான அடிகளை உடுத்துவது என்பது வேறு.... சரி தரமான ஆடைகள் என்றாலே பெரிய பெரிய ஷோ ரூமில் தான் கிடைக்கும் என தான் அனைவரும் நினைப்பார்கள்.. அதிலும் பெண்கள் விரும்பி அணியும் காட்டன் சுடிதார் என்றாலே போதும்.. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கிடைப்பது என்பது அரிது....

ஆனால் சென்னை எக்மோர் பகுதியில், பாந்தியன் சாலை உள்ளது... இந்த சாலையில் மாலை  நேரத்தில் சென்று பாருங்கள்.. எவ்வளவு அழகாக ஆடைகள் உள்ளது என்றும்....ரோட்டோரம் கடை என்று நினைத்து விட வேண்டாம்... வரிசை வரிசையாய் கடைகள் இருக்கும் ... கடைகள் முழுக்க நல்ல தரமான காட்டன ஆடைகள் மீட்டர் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆக மொத்தத்தில் ஒரு சுடிதார் எடுக்க வேண்டும் என்றால் ரூ.500 இருந்தாலே போதும்... அதில் நல்ல தரமான காட்டன் ஆடையை எடுத்துக் கொள்ளலாம். எல்லா விதமான கலர்களிலும், நல்ல டிசைன் மாடல் ஆடைகள் கிடைக்கும்... அதே போன்று  குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான ஆடைகளும் இங்கேயே கிடைக்கும்.