We can get the birth and death certificate through online

பிறப்பு இறப்பு சான்றிதழை இனி ஆன்லைனில் பெரும் வசதியை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த பணிகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

இதற்கான அரசாணையை,கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக,வரும் பிப்ரவரி மாதம் முதல்,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி பயன்பாட்டிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

எப்படி சாத்தியம்..?

பெண் கருவுற்றபின், கிராமப்புறமாக இருந்தால் கிராம சுகாதார செவிலியரிடமும், நகர்ப்புறமாக இருந்தால் நகர்ப்புற சுகாதார செவிலியரிடம் நேரில் சென்று பதிவு செய்து விட்டால் போதும்.

அப்போது ஒரு பதிவெண் கொடுப்பார்கள்,பின்னர் குழந்தை பிறந்த பின்பு, அந்த பதிவெண்ணை, ஆன்லைன் வெப்சைட் மூலமாக பதிவிட்டு, குழந்தை பிறந்த நேரம் மற்றும் தேதியை பதிவிட்டால் பிறப்பு சான்றிதழை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

இதே போன்று, ஒருவர் இறந்தபின், ஆன்லைனிலேயே இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.