ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள அத்திவரதர் வைபவத்தை காண பக்தர்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வருகை கூறுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அத்திவரதரை தரிசனம் செய்து இருந்தார். இதனால் 15 நிமிடங்களுக்கு பொது வழியில் தரிசனம் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் நேற்று கூட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. அதற்கு காரணம் அரசியல் தலைவர்கள் 23ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் தரிசனம் செய்ய உள்ளனர் என்ற செய்தி பரவலாக பரவியதே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று பொது வழியில் தரிசனம் செய்தவர்கள் வெறும் அரை மணி நேரத்திலேயே அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு திரும்பி உள்ளதால் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரணம்.... கடந்த 18ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு இந்த செய்தி வெகுவாக மக்கள் மத்தியில் பரவ கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறைய தொடங்கியது.

தற்போது பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி அத்திவரதரை நிம்மதியாக தரிசனம் செய்து வர முடிகிறது. இது தவிர கூடுதலாக எக்ஸ்பிரஸ் சேவை திட்டத்தை அமல்படுத்தி அதன் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரூபாய் 300 செலுத்தி தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை தெரிவித்து இருந்தது. இதன் காரணமாகவும் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார் என நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.