நம் முன்னோர்கள் எதை செய்தாலும், எதை பற்றி கருத்து சொல்லி இருந்தாலும் அதற்குப்பின் பல  முக்கியமான விஷயங்கள் இருக்கும்.குறிப்பாக நம் வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்திகளும் நெருங்காமல்  இருக்க வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள் முதல் சில சம்பிரதாயங்கள் வரை இன்றளவும் நம்மில் பல பேர் கடைபிடித்துத்தான் வருகிறார்கள்.

அந்த வகையில் நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அல்லது கெட்ட சக்திகள் இருக்குமேயானால்  அதனை எப்படி அறிந்துக்கொள்வது மற்றும் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைப்பற்றி பார்க்கலாம்

கட்டில் அடியில் ஒரு டம்ளர் தண்ணீர்

நாம் இரவில் உறங்க செல்லும் முன், ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பிடித்து,அதனை நாம் பயன்படுத்தும் கட்டில் அடியில் வைத்துவிட வேண்டும்.பின்னர் காலை எழுந்தவுடன் அந்த தண்ணீரை  மாற்றிவிட வேண்டும்.

நீர் முட்டை தோன்றுதல்

காலை எழுந்தவுடன் அந்த தண்ணீரில், நீர் முட்டைகள் காணப்பட்டாலோ அல்லது தண்ணீரின் நிறம் சற்று  மாறி இருந்தாலோ நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அந்த தண்ணீர் உறிஞ்சி உள்ளதாக   பொருள். அதனால் தான் அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் உறங்க செல்லும் முன், படுக்கையின்  கீழ் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து  உறங்குவர் என்பதை  நம்மில்  எத்தனை பேருக்கு தெரியும்.