உடல் எடையை குறைக்க வேண்டும், தொப்பையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிகமானவர்களின் முதல் தேர்வாக இருப்பது வாக்கிங் மற்றும் ஜாக்கிங் தான். ஆனால் இந்த இரண்டில் எது நல்லது? எதை தொடர்ந்தால் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும்? என்ற குழப்பம், கேள்வி பலருக்கும் உண்டு. இவை இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் பலன் தரக் கூடியது என்றாலும், எது பெஸ்ட் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை : உடல் எடையை, குறிப்பாக அடி வயிற்று தொப்பையை வேகமாக குறைக்க என்ன வழி என பலரும் சமீப காலமாக தேட துவங்கி விட்டனர். ஆனால் தொப்பை குறைய வாக்கிங் செல்லுங்கள், ஜாங்கிங் போங்க, உடற்பயிற்சி செய்யுங்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
வாக்கிங்- ஜாக்கிங் இரண்டில் எதை செய்தால் வேகமாக தொப்பை குறையும் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்த இரண்டு பயிற்சிகளும் வயிற்று கொழுப்பை எதிர்க்கும் மிகவும் எளிமையான மற்றும் வேகமாக பலன் தரக் கூடியதாக கருதப்படுகின்றன. இருந்தாலும் இரண்டில் எது பெஸ்ட் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உள்ளது. வயிற்று கொழுப்பை குறைக்க எது நல்லது என தெரிந்த கொள்ளலாம்.
வயிறு கொழுப்பை குறைக்க வாக்கிங் :
நடப்பது என்பது அனைத்து வயதினருக்கும் பொருந்தும் எளிமையான உடற்பயிற்சி ஆகும். நீண்ட நேரம் நடக்கும் போது அதிகமான கலோரிகள், கொழுப்புகள் எரியும். இதனை எளிதாக தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு இத ஈஸியான ஒன்று. அலுவலகத்தில் லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். அப்படி ஏறலாம் அல்லது மதிய உணவிற்கு பிறகு சிறியதாக ஒரு வாக் செய்ய முடியும். கலோரிகள் குறைவாகவும், அதிகமாகவும் எரியும் என்பதால் சரியான அளவில் உடல் எடையை பேண முடியும். எடை குறைக்கும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உருவாக்கத்திற்கும் முக்கியமான ஒன்றாக சொல்லப்படுகிறது.
தொப்பை குறைய ஜாக்கிங் :

ஓடுவது என்பது அதிக பலன் தரும் உடற்பயிற்சியாகும். இது நடப்பதை விட நொடி ஒன்றுக்கு அதிகமான கலோரிகள் எரிய செய்கிறது. வேகமாக இயக்குவதன் மூலம், ஓடுவது இதய மற்றும் இரத்த வழிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குறைந்த நேரத்தில் அதிக கலோரிகள் எரிகின்றது. இந்த தீவிர ஏரோபிக் செயல்பாடு appetites ஐ கட்டுப்படுத்த, வயிறு கொழுப்பை குறைத்து எடை குறைப்புக்கு உதவுகிறது. கலோரிகளை எரிக்கும் சக்தியுடன், ஓடுவது எடை குறைப்பதுடன், உடலை மேலும் உறுதியாக்கவும் ஆரோக்கியமான உடல் உருவாக்குவதற்கும் ஒரு பயனுள்ள வழி ஆகும்.
வாக்கிங் - ஜாக்கிங் : எது வயிறு கொழுப்பை குறைக்க சிறந்தது?
நடப்பது பயனுள்ளதாக இருந்தாலும், ஓடுவது கலோரி எரிப்பு மற்றும் செயல்திறன் காரணமாக சிறிது அதிக பலனை தரக் கூடியதாகும். இதனால் வேகமாக தொப்பையை குறைக்க வேண்டும் என வழி தேடுபவர்களுக்கு விருப்பமாக வழியாக மாறுகிறது. ஆனால் மெதுவாக தொப்பை குறைந்தால் போதும் என நினைப்பவர்களுக்கு நடப்பது சிறந்த தேர்வாகும். ஜாக்கிங் செல்வதுடன் முறையான உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மூட்டுக்களில் பிரச்சனை உள்ளவர்களும் ஜாக்கிங் செல்வதை தவிர்த்து, வாக்கிங் செல்வதை முயற்சி செய்தால் தொப்பை குறைந்து சரியான உடல் எடையை பராமரிக்க முடியும்.
செய்யக் கூடாத தவறுகள் :
தொடர்ச்சியாக 15 முதல் 20 நிமிடங்கள் ஜாக்கிங் அல்லது வாக்கிங் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் 30 நிமிடங்கள் வரை தொடரலாம். அதற்கு பிறகு சிறிது நேரம் பிரேக் எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் பயிற்சியை தொடரலாம். இப்படி செய்வதே சரியான முறையாகும். முதல் முறையாக வாக்கிங் அல்லது ஜாக்கிங் செய்ய துவங்குபவர்கள் முறைப்படி படிப்படியாக நேரத்தை அதிகரிக்க வேண்டும். வேகமாக தொப்பை குறைய வேண்டும் என்பதற்காக துவக்கத்திலேயே 40 நிமிடங்கள், ஒரு மணி நேரம் என பிரேக் இல்லாமல் நடப்பதோ, ஓடுவதோ தவறான முறையாகும்.
