மார்கழி மாத மகிமை….!!!  விடியற்காலை எழுந்து கோலம்  போடுவதன் அர்த்தம்  என்னனு  தெரியுமா..?

wahat is-the-special-abut-the-tamil-month-margazhi


மார்கழி மாத மகிமை….!!!  விடியற்காலை எழுந்து கோலம்  போடுவதன் அர்த்தம்  என்னனு  தெரியுமா..?

வீதியெங்கும் வண்ணக் கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனைப் பாடல்களும், மார்கழி மாதத்தின் தனிச் சிறப்புகள்.  ‘மார்கழித் திங்கள்  மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித் தமிழின் துணை  கொண்டு ஆராதனை செய்த  மாதம் இது. ஆண்டாளின் அடிதொட்டு, மணமாகாத பெண்கள் தாங்கள் நினைத்தபடி வரன் அமைய இன்றளவும்  மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து  முடித்து திருப்பாவைப் பாடல்களை மனமுருகப் பாடுவதை சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  காண முடிகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம்  இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை. அப்படியிருக்க  மார்கழி மாதத்தை ஏன் உயர்வாகக் கொண்டாட வேண்டும்?

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை  ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம்.

இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப்  பொறுத்தவரை இரவுப் பொழுது - நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள்  கொள்ளலாம்.

இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள்  முதல் நாள் இரவே  கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள  வேண்டியது அவசியம்.

மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்துப் பாருங்கள்,  மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios