வோடபோன் அதிரடி சலுகை..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! 

வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வாரி வழங்கி உள்ளது.

இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவானம் ரூ.1,699 இல் வெளியிட்ட திட்டப்படி ஒரு வருட சலுகையை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு போட்டியாக வோடபோன் ரூ.1,999 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  திட்டம் மூலம் தினமும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம், தினமும்1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் என சலுகையை அறிவித்து உள்ளது.ஆனால் இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட சலுகையில், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த திட்டம், கேரளாவில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

பின்னர் மேலும் பல மாநிலத்தில் கொண்டுவர முடிவு செய்து உள்ளது வோடபோன் நிறுவனம். இதே போன்று, ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் நிறுவனத்தின் இந்த சலுகை வாடிக்கையாளர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.