VIRUTUAL ID CREATED INSTEAD OD ADHAR
ஆதாருக்கு பதிலாக "16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி".. மத்திய அரசு அதிரடி..!
ஆதார் எண் இல்லாமல் இனி ஒரு அணுவும் அசையாது என்பது பல நல திட்ட உதவிகள் முதல்,நம் சொத்து விவரம் வரை இனி அனைத்தும் ஒரே லைனில் வரும்...
இதற்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும்,அதே சமயத்தில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி வந்ததால்,இதற்கு மாற்று என்ன என்று யோசித்த மத்திய அரசு தற்போது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது .
அதன்படி, விர்சுவல் ஐடி கொடுக்கப்பட்டு உள்ளது.

விர்சுவல் ஐடி என்றால் என்ன ? VIRTUAL ID..?
தனி மனித ரகசுயயத்தை காக்க,ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த VIRTUAL ID உருவாக்கலாம்.அதாவது ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படி VIRTUAL ID ஐ பெறுவது தெரியுமா?
முதலில்,UIDAI வெப்சைட் ஓபன் செய்து,அதில்12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டால், தானாகவே,16 இலக்க எண்களை கொண்ட VIRTUAL ID கிடைக்கும்.
ஒரு முறை இந்த VIRTUAL ID பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதம் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
எப்போது செயல்பாட்டுக்கு வருகிறது ?
VIRTUAL ID பெற, மார்ச் 1 ஆம் தேதி முதல், UIDAI வெப்சைட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
விர்ச்சுவல் அடையாள எண்ணை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
VIRTUAL எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது...
மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல்,இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வர உள்ளது. அதாவது எங்கெல்லாம் VIRTUAL எண்ணை பயன்படுத்த வேண்டுமோ...அது குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
