"ஆன்லைனில் நிச்சயதார்த்தம்"... அதிர்ச்சி  கிளப்பும் பரபரப்பு வீடியோ..! 

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு உயர்ந்து விட்டாலும் மனிதர்களின் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் ஒரு பக்கம் மாறிய கொண்டே தான் உள்ளது. 

உணவு பழக்க வழக்கங்களிலும், கலாச்சார சீர்கேடு ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது கல்யாணம் கூட சாதாரண விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

அதற்கெல்லாம் ஒரு உதாரணமாக தற்போது மணமகன் மணமகள் இருவரும் ஒன்றாக அருகில் நிற்க வைத்து நிச்சயதார்த்தம் செய்யும் காலம் எல்லாம் மலையேறி சென்று புதுவிதமாக மொபைல் போனில் மணமகன் ஒரு பக்கம் இருக்க, மணமகள் வேறு ஒரு எங்கோ ஒரு இடத்தில் இருக்க... இருவரும் வைவ் வீடியோ காலில் வரவைத்து இருவீட்டாரின் பெற்றோரும் சாதாரணமாக வீட்டில் வைத்தபடியே நேரலையில் நிச்சயதார்த்தம் செய்கின்றனர்.

அப்போது மணமகன் மற்றும் மணமகள் இருவரிடமும் பேசியவாறே அவர்களிடம் ஒப்புதல் பெறுகின்றனர். இதனை பெற்றோர்களும் உறவினர்களும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர். இவ்வாறு நிச்சயதார்த்தம் செய்யும்போது முறைப்படி  சீர்வரிசை வைத்து அதனையும் வீடியோ எடுத்து இருக்கின்றனர். இந்த காட்சி முழுக்க பதிவான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மக்கள் அடப்பாவிகளா... ஆன்லைனில் நிச்சயதார்த்தமா என மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் வேற என்னவெல்லாம் ஆன்லைனில் நடக்கப்போகிறதோ..?