இதை விட ஒரு சாதனை செய்ய முடியுமா..! பஞ்சாயத்து  தலைவர் அதிரடி அறிவிப்பு..!

மங்களூருவில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் பட்கர் என்பவர் கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற முடிவு செய்து  ஊர்அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி சென்ற மாதம் ஜனவரியில் அறிவித்த அறிவிப்பின்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தால் அவர்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து சிறுவா கிராமத்தில் வசித்து வந்த கிராம மக்கள் ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்து அதற்கு பதிலாக ஒரு கிலோ அரிசியை வாங்கி சென்றனர். இந்த முறைஅமல்படுத்தப்பட்ட பிறகு சிருவா கிராமம் மெல்ல மெல்ல தூய்மையாக தொடங்கியது. அந்த கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பொருட்களை பார்ப்பது கூட அரிதாக காணப்பட்டது. இதன் மூலம் அந்த ஊர் கிராம மக்களே இந்த திட்டத்திற்கு அதிக ஆதரவு கொடுத்து எங்கு பிளாஸ்டிக் பொருட்கள் கீழே இருந்தாலும் அதனை எடுத்து வந்து வீட்டில் கொடுத்து அதற்கு பதிலாக ஒரு கிலோ அரிசியை வாங்கி செல்வது வழக்கமாக வைத்திருந்தனர். இப்போது அந்த கிராமமே பிளாஸ்டிக் இல்லாத ஓர் அழகிய கிராமமாக மாற்றப்பட்டு உள்ளது என்றால் அதற்கெல்லாம் காரணம் பட்கர் என்பதில் மாற்று கருத்து கிடையாது.